கெம்பாங்கான் வட்டாரத்தில் தீப்பிழம்பான கார்

கெம்பாங்கான் வட்டாரத்தில் தீப்பிழம்பான கார்

1 mins read
59149a17-8a3e-4451-90b8-55ffa327efd6
-

ஜாலான் கெம்பாங்கானில் கார் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை தீப்பற்றி எரிந்தது.

கெம்பாங்கான் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் தீப்பிழம்பான காரைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்த தகவல் பிற்பகல் 3.45 மணிக்கு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. விசாரணை தொடர்கிறது.