பத்தில் 8 பேர் வீட்டிலிருந்து வேலை செய்ய விருப்பம்

வீட்­டி­லி­ருந்து வேலை செய்ய அல்­லது நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பாட்­டுக்கு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் நடத்­திய ஆய்­வில் பங்­கெ­டுத்த பத்­தில் எட்டு பேர் விருப்­பம் தெரி­வித்­துள்­ள­னர்.

ஆய்­வில் ஏறத்­தாழ 1,800 பேர் பங்­கெ­டுத்­த­னர்.

முழு­நே­ர­மாக அலு­வ­ல­கத்­துக்­குத் திரும்ப ஆய்­வில் பங்­கெ­டுத்த பத்­தில் ஒரு­வர் மட்­டுமே விருப்­பம் தெரி­வித்­தார்.

அலு­வ­ல­கங்­க­ளுக்­குக் கூடு­தல் ஊழி­யர்­கள் திரும்­ப­லாம் என்று கடந்த மாதம் 28ஆம் தேதி­யன்று அர­சாங்­கம் அறி­வித்­த­தற்கு முன்பே வேலை­யி­டம் திரும்­பி­விட்­ட­தாக எஞ்­சி­யி­ருப்­போர் தெரி­வித்­த­னர்.

வேலை­யி­டத்­துக்­குத் திரும்­பி­யி­ருப்­ப­வர்­களில் பெரும்­பா­லா­னோர் அலு­வ­ல­கத்­துக்­குச் செல்­ல­வும் அதன்­பி­றகு வீடு திரும்­ப­வும் பய­ணம் செய்ய வேண்­டி­யி­ருப்­பது குறித்து அதி­ருப்தி தெரி­வித்­துள்­ள­னர்.

வேலை­யி­டச் சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு குறித்­தும் அவர்­கள்

அக்­கறை தெரி­வித்­த­னர். கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­படும் ஆபத்து குறித்து அவர்­கள் அச்­சம் தெரி­வித்­த­னர்.

கொவிட்-19 ஆபத்து இருக்­கும் நிலை­யில் பொதுப் போக்­கு­வ­ரத்­தில் பய­ணம் செய்­வது, மக்­கள் கூட்­டம் ஆகி­யவை தாங்கள் எதிர்­நோக்­கும் மிகக் கடு­மை­யான சவால்­கள் என்று வேலை­யி­டத்­துக்­குத் திரும்­பி­யுள்ள பலர் கூறி­னர்.

முகக்­க­வ­சம் அணிந்­து­கொண்டு வேலை செய்­வது அசௌ­க­ரி­ய­மாக இருப்­ப­தா­க­வும் வேலை­யில் ஒழுங்­கா­கக் கவ­னம் செலுத்த முடி­ய­வில்லை என்­றும் ஆய்­வில் பங்­கெ­டுத்த பத்­தில் மூவர் தெரி­வித்­த­னர்.

சில நாட்­கள் அலு­வ­ல­கத்­தி­லும் சில நாட்­கள் வீட்­டி­லி­ருந்­தும் வேலை செய்ய பத்­தில் நால்­வர் விருப்­பம் தெரி­வித்­த­னர்.

வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வ­தைத் தொடர அதை­விட சற்று அதி­க­மா­னோர் விரும்­பு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!