மனநல விழிப்புணர்வுக்கு புதிய நிதி

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள தென்­கி­ழக்கு வட்­டா­ரக் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு உதவி செய்­ய­வும் சமூ­கத்­தில் மன­ந­லம் குறித்து விழிப்­பு­ணர்வு ஏற்ப­டுத்­த­வும் புதிய $2 மில்­லி­யன் நிதி அமைக்­கப்­பட்­டுள்­ளது.

தென்­கி­ழக்கு சமூக மேம்­பாட்டு மன்­றம், சூப்­பர் குரூப்­பின் டியோ குடும்­பத்­தா­ரு­டைய தனி­யார் முத­லீட்டு நிறு­வ­ன­மான ஆப்­ரி­கோட் கெப்­பிட்­டல் ஆகி­ய­வற்­றால் நிதி அமைக்­கப்­பட்­டுள்­ளது.

குறைந்த, நடுத்­தர வரு­மா­னக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஏறத்­தாழ 2,400 குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு அடித்­தள அமைப்­புத் தலை­வர்­கள் மூலம் நிதி வழங்­கப்­படும்.

மரின் பரேட் குழுத்­தொ­குதி, ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி, மவுண்­ட்பேட்­டன் தனித் தொகுதி, மெக்­பர்­சன் தனித்­தொ­குதி ஆகிய தொகு­தி­க­ளைச் சேர்ந்த 500,000 குடி­யி­ருப்­பா­ளர்­கள் தென்­கி­ழக்கு சமூக மேம்­பாட்டு மன்­றத்­தின் மேற்­பார்­வை­யின்­கீழ் வரு­கின்­ற­னர்.

மாண­வர்­க­ளுக்­காக தனி­யாக $320,000 ஒதுக்­கப்­படும். இதைப் பயன்­ப­டுத்தி சிறப்­புத் தேவை­யுள்ள மாண­வர்­களும் உயர்­நி­லைப்­பள்ளி மற்­றும் உயர் கல்வி மாண­வர்­களும் உணவு, புத்­த­கங்­கள் போன்­ற­வற்றை வாங்­க­லாம். மன­நலம் குறித்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த நாட­கம் ஒன்­றைத் தயா­ரிக்க $100,000 ஒதுக்­கப்­ப­டு­கிறது.

இந்த நாட­கம் மூலம் இளை­யர்­க­ளி­டையே மன வலி­மையை மேம்­ப­டுத்­த­வும் ஆத­ர­வுக் கட்­ட­மைப்­பு­களை மேம்­ப­டுத்­த­வும் சமூக மேம்­பாட்டு மன்­றம் இலக்கு கொண்­டுள்­ளது. மன­நல நோயா­ளி­க­ளுக்­கும் அவர்­க­ளைப் பார்த்­துக்­கொள்­வோ­ருக்­கும் ஆத­ரவு வழங்­கு­வது பற்றி விளங்கும் மன­ந­லப் பயிற்­சி­களும் பயி­ல­ரங்­கு­களும் நடத்­தப்­படும். இதற்­காக $80,000 ஒதுக்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் வேலை கிடைக்­கா­மல் சிர­மப்­படும் 18 வய­துக்­கும் 35 வய­துக்­கும் இடைப்­பட்ட இளை­யர்­க­ளுக்கு உதவ $300,000 ஒதுக்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!