வடகொரியாவுக்கு சொகுசுப் பொருட்களை விற்றவருக்கு சிறை

வடகொரியாவுக்கு சொகுசுப் பொருட்களை விற்றவருக்கு சிறை

1 mins read
d94422b0-da23-46f4-aefd-74aedfaf0624
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வடகொரியாவுக்கு சட்டவிரோதமாக கிட்டத்தட்ட $580,000 பெறுமானமுள்ள சொகுசுப் பொருட்களை விற்ற குற்றத்துக்காக மூன்று நிறுவனங்களின் இயக்குநரான சோங் ஹொக் யேனுக்கு மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எஸ்சிஎன் சிங்கப்பூர், சின்டோக் டிரேடிங், லோரிச் இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனத்தின் இயக்குநராக சோங் பதவி வகிக்கிறார். வடகொரியாவிடம் அவர் வாசனைத் திரவம், அழகுப் பொருட்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் போன்ற சொகுசுப் பொருட்களை விற்றதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

வடகொரியாவிடம் $270,000 பெறுமானமுள்ள சொகுசுப் பொருட்களை விற்றதை சிங்கப்பூரரான 60 வயது சோங் கடந்த மாதம் ஒப்புக்கொண்டார்.

எஸ்சிஎன் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு $120,000 அபராதம் விதிக்கப்பட்டது. சின்டோக் டிரேடிங், லோரிச் இண்டர்நேஷனலுக்கும் தலா $10,000 அபராதம் விதிக்கப்பட்டது.