உணவகமாக மாறும் விமானம்: திட்டத்துக்குப் பேராதரவு; கூடுதல் இருக்கைகள் அமைக்க ஏற்பாடு

உணவகமாக மாறும் விமானம்: திட்டத்துக்குப் பேராதரவு; கூடுதல் இருக்கைகள் அமைக்க ஏற்பாடு

1 mins read
4d298bda-efef-4b64-8ac9-f178e0604855
விமானத்தில் மூன்று மணி நேரம் சாப்பிடலாம். பயண வகுப்புக்கு ஏற்ப கட்டணம் $50 முதல் $600 வரை இருக்கும். படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் -

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ) நிறு­வ­னத்­தின் ஏ380 உண­வ­கத்­தில் உள்ள 900க்கும் அதிக இடங்­களும் நேற்று அவற்­றுக்­கான முன்­ப­திவு தொடங்கி 30 நிமி­டங்­க­ளுக்­குள் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டு­விட்­டன.

அந்த விமான உண­வ­கம் சாங்கி­யில் செயல்­ப­டும். பல­ரும் காத்­தி­ருப்­போர் பட்­டி­ய­லில் இடம்­பெற்று இருந்­த­னர். அவர்­க­ளுக்­கும் இடம் அளிக்க எஸ்­ஐஏ முயற்சி செய்வதாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

கொவிட்-19 தொற்று காரணமாக பய­ணத்­துறை படு­மோ­ச­மாக பா­திக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் செப்டம்­பர் 18ஆம் தேதி எஸ்­ஐஏ ஓர் அறி­விப்பு விடுத்­தது.

விமா­னச் சேவை தொடங்­க­வில்லை என்­றா­லும் பொது­மக்­கள் விமா­னத்­தில் கிடைக்­கும் சேவை­களை அனு­ப­வித்­துப் பார்க்­க­லாம் என்று அது தெரி­வித்­தது.

மொத்­தம் 471 பய­ணி­களை ஏற்­றிச் செல்­லக்­கூ­டிய ஏ380ரக விமா­னம் சாங்கி விமான நிலை­யத்­தில் அக்­டோ­பர் 24 மற்­றும் 25 ஆம் தேதி­களில் உண­வ­க­மாக மாற்­றப்­படும் என்று அது அறி­வித்­தது.

மொத்தம் சுமார் 900 பேர் உணவு உண்ணலாம்.