நிறுவனங்களுக்கு அதிகமான மானியம், கடன் வசதிகள்

வளர்ச்சி அடை­ய­வும் உற்­பத்­தித்­தி­ற­னைப் பெருக்­க­வும் வெளி­நாடு­களில் விரி­வ­டை­ய­வும் விரும்பும் நிறு­வ­னங்­கள் விரை­வில் அதிக மானி­யங்­க­ள், விரி­வு­படுத்­தப்பட்ட கடன் ஏற்­பா­டு­க­ள் மூலம் நன்மை அடை­ய­லாம்.

கொவிட்-19 சூழ­லில் நிறு­வனங்­க­ளுக்கு அதிக ஆத­ரவை அளித்து அவை உரு­மா­றிக்­கொள்ள உத­வும் நோக்­கத்­தில் இந்த முயற்­சி­கள் இடம்­பெ­று­கின்­றன. வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று இதனை தெரி­வித்­தார்.

அமைச்­சர், நிறு­வ­னங்­க­ளுக்கு உரிய பல மானியத் திட்­டங்­களும் கடன் ஏற்­பா­டு­களும் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு இருப்­ப­தா­கக் கூறி­னார்.

அதன்­படி அனைத்­து­ல­க­ம­ய­மாக விரும்­பும் நிறு­வ­னங்­கள் நவம்­பர் 1 முதல் செப்­டம்­பர் 30 வரை­யில் 80% வரைப்­பட்ட செல­வுக்கு மானி­யம் பெற­லாம். சந்தை ஆயத்த உதவி மானி­யம் மூலம் இது கிடைக்­கும்.

இந்த உதவி, மெய்­நி­கர் வர்த்தகக் கண்­காட்­சி­களில் கலந்துகொண்டு நிறுவனங்­கள் புதிய வாய்ப்­பு­க­ளைக் கண்­டு­அறியவும் ஊக்­க­மூட்­டும் என்று திரு சான் மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் குறிப்­பிட்­டார்.

சில்­லறை வர்த்­த­கர்­கள் வெளி­நா­டு­களில் விரி­வ­டை­வது மிக­வும் விவே­க­மா­ன­தாக இருக்­கும் என்றும் அவர் தெரி­வித்­தார்.

நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்­க­ம­ய­மாக இப்­போது கிடைக்­கக்­கூ­டிய அதிக ஆத­ரவு ஜன­வரி 1 முதல் கூடு­த­லாக மேலும் ஒன்­பது மாதங்­க­ளுக்­குக் கிடைக்­கும்.

தொழில்­மு­னைப்பு மேம்­பாட்டு மானி­யம், உற்­பத்­தித்­தி­றன் தீர்வு மானி­யம் ஆகி­யவை மூலம் நிறு­வனங்­கள் அடுத்த ஆண்டு செப்டம்­பர் வரை 80% அள­வுக்­கும் அதற்­குப் பிறகு 70% அள­வுக்­கும் மானி­யம் பெற­மு­டி­யும்.

கடன்­பெற முய­லும் நிறு­வ­னங்­களுக்கு மேலும் உத­வி­கள் கிடைக்­கும். அடுத்த ஆண்டு ஜன­வரி 1 முதல், கட்­டு­மான நிறு­வ­னங்­கள் காப்­பு­றுதி பாது­காப்பு பெற்ற உள்­நாட்­டுத் திட்­டங்­க­ளுக்­குத் தேவை­யான பணத்­தைக் கட­னா­கப் பெற விண்­ணப்­பிக்­க­லாம்.

இதில் குறைந்­த­பட்­சம் பாதிப் பொறுப்பை அர­சாங்­கம் ஏற்­கும். இந்த ஏற்­பாடு 2022 மார்ச் 31 வரை நடப்­பில் இருக்­கும்.

குறைந்த வட்­டி­யில் நடை­முறை மூல­த­னத்­தைப் பெறு­வ­தற்கு வகை செய்­யும் தற்­கா­லிக குறு­கி­ய­கால கடன் திட்­ட­மும் வர்த்­த­கக் கட­னுக்­கான நிதித்­திட்­ட­மும் ஆறு மாதம் நீட்­டிக்­கப்­பட்டு அடுத்த ஆண்டு செப்டம்­பர் 30 வரை நடப்பில் இருக்­கும்.

இந்­தத் திட்­டங்­கள் புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் ­கொள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு உதவு­கின்­றன என்றார் திரு சான்.

இத­னி­டையே, சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்குக் குறைந்த வட்­டி­யில் கடன் கிடைக்க வகை செய்­யும் ஒரு திட்­டத்தை 2021 ஏப்­ரல் முதல் 2021 செப்­டம்­பர் வரை ஆறு மாத காலம் நீட்­டிக்­கப்­போ­வ­தாகத் தெரி­வித்­தது.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், கொவிட்-19 தொற்­றுக்கு முன்­பாகவே இணை­ய வர்த்­த­கம் அதி­க­ரித்து வரு­வது போன்ற பல சவால்­களை எதிர்­நோக்கி இருப்­ப­தாக அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

கொவிட்-19 கார­ண­மாக இந்­தத் தொழில்­துறை மேலும் பாதிக்­கப்­பட்­டு­விட்­டது.

சில்­லறை வர்த்­த­கம் முன் ஒரு­போ­தும் இல்­லாத அள­வுக்கு ஆண்டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் கடந்த மே மாதம் 52.1 விழுக்­காடு குறைந்­து­விட்­டது என்­ப­தை­யும் அமைச்­சர் சுட்­டினார்.

சில்­லறை வர்த்­தக நிறு­வனங்கள் உரு­மா­றிக்­கொண்டு தொடர்ந்து நிலைத்­தி­ருக்க மூன்று வழி­கள் முக்­கி­யம் என்று அவர் யோசனை தெரி­வித்­தார்.

வாடிக்­கை­யா­ளர்­க­ளின் புதிய தேவைக்­கேற்ப அவை மாறிக்­கொள்ள வேண்­டும், உள்­நாட்டு விற்­ப­னையை மட்­டும் சார்ந்­தி­ருக்க முடி­யாது, சேவை, வடி­வ­மைப்பு ஆகி­ய­வற்­றி­லும் அவை கவ­னம் செலுத்த வேண்­டும் என்­றாரவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!