சிங்கப்பூர்-பிரான்ஸ் உறவு: நூற்றாண்டு கொண்டாட்டம்

சிங்கப்பூர்-பிரான்ஸ் உறவு: நூற்றாண்டு கொண்டாட்டம்

1 mins read
182b5966-6a7a-402d-9896-f446fb1ade98
1920aஅம் ஆண்டில் அப்போதைய பிரஞ்சு பிரதமர் திரு ஜார்ஜஸ் கிளமென்சு (முன்வரிசையில் இடமிருந்து நான்காவது) சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது டாக்டர் லிம் பூன் கெங் (முன்வரிசையில் இடமிருந்து ஐந்தாவது) உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம். படம்: MUSEE CLEMENCEAU -

இந்த ஆண்டின் சிங்கப்பூர்- பிரான்ஸ் கொண்டாட்டம், இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு உறவு ஏற்பட்டு 100 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும்.

vOilah! என்ற அந்தக் கொண்டாட்டம் அக்டோபர் 22 முதல் நவம்பர் 22 வரை நடக்கும். பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஜார்ஜ் கிளமென்சியூ 1920ல் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட வருகையைக் காட்டும் கண்காட்சி ஒன்றும் இடம்பெறும்.

கொவிட்-19 காரணமாக ஏறக்குறைய 60% கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இணையம் வழி இடம்பெறும்.

இசை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், தாவரக் கண்காட்சி, மெய்நிகர் நிகழ்ச்சி உள்ளிட்ட பலவும் உண்டு என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது.