கப்பல் மகிழ்உலா: 5 நாட்களில் 6,000 பேர் முன்பதிவு

கப்பல் மகிழ்உலா: 5 நாட்களில் 6,000 பேர் முன்பதிவு

1 mins read
69af702b-0880-4b7f-b687-481d10ee3c97
படம்: GENTING CRUISE LINES -

ஜென்டிங் குரூஸ் லைன்ஸ் நிறுவனத்தின் மகிழ்உலா கப்பல் பயணத்திற்குப் பேராதரவு கிடைத்திருக்கிறது. ஐந்தே நாட்களில் 6,000 பேருக்கும் அதிகமானவர்கள் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு பதிவும் குறைந்தது இரண்டு பேருக்கு உரியது. ஆதரவு எதிர் பார்த்ததைவிட அதிகமாக இருப்பதாக ராயல் கரீபியன் இண்டர்நேஷனல் என்ற மற்றொரு நிறுவனமும் தெரிவித்தது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் மொத்தம் 23 கப்பல் மகிழ்உலாக்களுக்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது.