வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிதாக எவருக்கும் பாதிப்பு இல்லை

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்பகல் நில­வ­ரப்­படி மேலும் நால்­வ­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. இதன்­மூ­லம் சிங்­கப்­பூரில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 57,884ஆக அதி­க­ரித்­துள்­ளது.

புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள நால்­வ­ரும் வெளி­நாட்­டி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­வர்­கள்.

அவர்­கள் சிங்­கப்­பூர் வந்­த­தும் அவர்­க­ளுக்கு வீட்­டி­லேயே இருக்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது. நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி சமூக அள­வில் எவ­ருக்­கும் பாதிப்­பில்லை. அது­மட்­டு­மல்­லா­மல் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதிக்­குப் பிறகு நேற்­று­தான் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான தங்­கும் விடுதி ­களில் புதி­தாக எவ­ருக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லை­யில், கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்ட 64 வயது ஆட­வர் நேற்று முன்­தி­னம் உயி­ரி­ழந்­தார். அவ­ருக்கு ஏற்­கெ­னவே உயர் ரத்த அழுத்­தம் இருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

நிரந்­த­ர­வா­சி­யான அந்த ஆட­வர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் சிங்­கப்­பூ­ரில் மர­ணம் அடைந்த 28வது நப­ரா­வார். இதற்கு முன் கடந்த மூன்று மாதங்­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரில் இந்­நோ­யால் உயி­ரி­ழப்­பு­கள் நிக­ழ­வில்லை.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­தி­லி­ருந்து அவர் இந்­தி­யா­வில் பணி­பு­ரிந்து வந்­த­தா­க­வும் கடந்த மாதம் 23ஆம் தேதி­யன்று அவர் சிங்­கப்­பூர் திரும்­பி­ய­போது அவ­ருக்கு வீட்­டி­லேயே இருக்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

அவ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக இம்­மா­தம் 4ஆம் தேதி­யன்று உறுதி செய்­யப்­பட்­டது. மாண்ட ஆட­வ­ரின் குடும்­பத்­தா­ரு­டன் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை தொடர்­பு­கொண்­டுள்­ளது. அவர்­க­ளுக்­குத் தேவை­யான உதவி­ களை அது செய்து வரு­கிறது.

இதற்கு முன் ஆகக் கடை­சி­யாக கிரு­மித்­தொற்று கார­ண­மாக 62 வயது ஆட­வர் ஒரு­வர் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி­யன்று மாண்­டார்.

நேற்று முன்­தி­னம் மேலும் நால்­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. சமூக அள­வில் ஒரு­வர் பாதிப்­ப­டைந்­தார். அவர் ஏற்­கெ­னவே கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­தாக உறுதி செய்­யப்­பட்ட ஒரு­வ­ரின் குடும்ப உறுப்­பி­னர் என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இரு­வ­ரு­டன் அப்­பெண் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­தாக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது.

மூவ­ரும் கடந்த மாதம் 16ஆம் தேதி­யன்று இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்­த­னர். சிங்­கப்­பூர் வந்­த­தும் அவர்­க­ளுக்கு வீட்­டி­லேயே இருக்­கும் உத்­த­ரவு பிறக்­கப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து 23 பேர் குண­ம­டைந்து வசிப்­பி­டம் திரும்­பி­னர்.

இதன்­மூ­லம் சிங்­கப்­பூ­ரில் இது­வரை 57,713 பேர் கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்­துள்­ள­னர்.

நேற்­றைய நில­வ­ரப்­படி 48 பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறு­கின்­ற­னர். தீவிர சிகிச்­சைப் பிரி­வில் யாரும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. குண­ம­டைந்து வரும் 76 பேர் சமூக மருத்­து­வ­ம­னை­களில் தங்­கு­கின்­ற­னர்.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 15 பேர் வேறு உடல்­

ந­லப் பிரச்­சி­னை­கள் கார­ண­மாக இறந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!