வேலை தேடும் எல்லாப் பிரிவினருக்கும் வாய்ப்பு

வேலை தேடுவோர் அலுவலக வேலைகளும் ஊழியர்களுக்கான வேலைகளும் எங்கெங்கு காலியாக உள்ளன என்பதை அறிந்துகொள்ள புதிதாக அமைக்கப்பட்ட வாழ்க்கைத் தொழில் நிலையங்களை அணுகலாம் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்து உள்ளார்.

வேலை தேடுவோருக்குப் பொருந்தக்கூடிய எல்லாவிதமான வேலைகளும் இந்த நிலையங்களில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலில் நிறுவனங்களில் காலியாக உள்ள வேலை நிலவரம் குறித்து அவர் விளக்கினார்.

உடலுழைப்பு வேலைகளைத் தேடுவோர் எஸ்ஜி ஒற்றுமை வேலைகள் மற்றும் திறன்கள் நிலையங்கள் தவிர்த்து வேறு வழிகளின் வாயிலாக எவ்வாறு உதவிபெறலாம் என்று பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட் குழுத்தொகுதி உறுப்பினர் ஜெரல்ட் கியம் கேள்வி எழுப்பி இருந்தார்.

நகரங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாழ்க்கைத்தொழில் நிலையங்கள் எஸ்ஜி ஒற்றுமை வேலைகள் மற்றும் திறன்கள் என்னும் தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட்டால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

கிருமிப் பரவல் காரணமாக எழுந்துள்ள நெருக்கடியால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடன் இந்நிலையங்கள் அமைக்கப்படுவதாக இவ்வாண்டின் நான்காவது வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது திரு ஹெங் அறிவித்து இருந்தார்.

ஆனால் இந்த வேலை வாய்ப்பு நிலையங்கள் பிஎம்இடி எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்களுக்கான வாய்ப்புகளில் மட்டும் கவனம் செலுத்தக்கூடியதுபோலத் தோன்றுவதாக மன்றத்தில் திரு கியம் குறிப்பிட்டார்.

திருவாட்டி டியோ அவருக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசுகையில், தொகுப்புத் திட்டத்தின்கீழ் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வேலைகள் பிஎம்இடி அல்லாதவர்களுக்கானவை என்றார்.

“பிஎம்இடி வேலைகளை அவற்றைத் தேடுவோருக்குப் பொருந்தச் செய்ய நீண்ட காலம் பிடிக்கும். அதேநேரம் பிஎம்இடி அல்லாத பணிகளுக்கு அவை எளிதாகப் பொருந்தக்கூடியனவாக உள்ளன என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளோம்.

“தற்போதைய நிலையில், வேலை தேடுவோருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நிறுவனங்கள் மீதுதான் நமது கவனம் இருக்க வேண்டும்,” என்றார் அமைச்சர்.

மேலும் அவர் கூறுகையில் புதிய வேலைகள் தொடர்பாக சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் மட்டுமின்றி தொழிற்சங்கங்கள் மற்றும் வர்த்தக சபைகள் ஆகியவற்றுடனும் அமைச்சு இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்வேலை ேதடுவோர் அலுவலக வேலைகளும் ஊழியர்களுக்கான வேலைகளும் எங்கெங்கு காலியாக உள்ளன என்பதை அறிந்துகொள்ள புதிதாக அமைக்கப்பட்ட வாழ்க்கைத் தொழில் நிலையங்களை அணுகலாம் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்து உள்ளார்.

வேலை தேடுவோருக்குப் பொருந்தக்கூடிய எல்லாவிதமான வேலைகளும் இந்த நிலையங்களில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலில் நிறுவனங்களில் காலியாக உள்ள வேலை நிலவரம் குறித்து அவர் விளக்கினார்.

உடலுழைப்பு வேலைகளைத் தேடுவோர் எஸ்ஜி ஒற்றுமை வேலைகள் மற்றும் திறன்கள் நிலையங்கள் தவிர்த்து வேறு வழிகளின் வாயிலாக எவ்வாறு உதவிபெறலாம் என்று பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட் குழுத்தொகுதி உறுப்பினர் ஜெரல்ட் கியம் கேள்வி எழுப்பி இருந்தார்.

நகரங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாழ்க்கைத்தொழில் நிலையங்கள் எஸ்ஜி ஒற்றுமை வேலைகள் மற்றும் திறன்கள் என்னும் தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட்டால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

கிருமிப் பரவல் காரணமாக எழுந்துள்ள நெருக்கடியால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடன் இந்நிலையங்கள் அமைக்கப்படுவதாக இவ்வாண்டின் நான்காவது வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது திரு ஹெங் அறிவித்து இருந்தார்.

ஆனால் இந்த வேலை வாய்ப்பு நிலையங்கள் பிஎம்இடி எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்களுக்கான வாய்ப்புகளில் மட்டும் கவனம் செலுத்தக்கூடியதுபோலத் தோன்றுவதாக மன்றத்தில் திரு கியம் குறிப்பிட்டார்.

திருவாட்டி டியோ அவருக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசுகையில், தொகுப்புத் திட்டத்தின்கீழ் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வேலைகள் பிஎம்இடி அல்லாதவர்களுக்கானவை என்றார்.

“பிஎம்இடி வேலைகளை அவற்றைத் தேடுவோருக்குப் பொருந்தச் செய்ய நீண்ட காலம் பிடிக்கும். அதேநேரம் பிஎம்இடி அல்லாத பணிகளுக்கு அவை எளிதாகப் பொருந்தக்கூடியனவாக உள்ளன என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளோம்.

“தற்போதைய நிலையில், வேலை தேடுவோருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நிறுவனங்கள் மீதுதான் நமது கவனம் இருக்க வேண்டும்,” என்றார் அமைச்சர்.

மேலும் அவர் கூறுகையில் புதிய வேலைகள் தொடர்பாக சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் மட்டுமின்றி தொழிற்சங்கங்கள் மற்றும் வர்த்தக சபைகள் ஆகியவற்றுடனும் அமைச்சு இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

“எதிர்கால நலன் கருதி ஏராளமான நிறுவனங்கள் வேலை தேடுவோரை தங்கள் தொழிற்கூடங்கள் பக்கம் ஈர்க்க இதுவே சரியான நேரம் என்று கருதுகின்றன.

“மேலும் இதற்கு முன்னர் ஏற்க முன்வராத வேலை களை நிரப்புவதிலும் அவை கவனம் செலுத்துகின்றன.

“நிரந்தர வேலைக்கான காலியிடத்தை நிரப்பும்போது வர்த்தக நிலவரத்தை நிறுவனங்கள் கவனத்தில் கொள்கின்றன. பயிற்சிக்கு எடுக்கப்பட்டு இருப்போர் நிறுவனத்திற்கு நல்ல முறையில் பங்களிக்கக்கூடிய திறன் பெற்றிருக்கிறாரா என்பதையும் அவை கவனிக்கின்றன,” என்றார் திருவாட்டி டியோ.
ஜூலை 1 முதல் வாழ்க்கைத்தொழில் நிலையங்கள் தீவின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன. அங் மோ கியோ, பிடோக், புக்கிட் பாத்தோக், சுவா சூ காங், ஜூரோங் வெஸ்ட், செங்காங், உட்லண்ட்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் அவை அமைக்கப்பட்டுள்ளன.டார்.
“எதிர்கால நலன் கருதி ஏராளமான நிறுவனங்கள் வேலை தேடுவோரை தங்கள் தொழிற்கூடங்கள் பக்கம் ஈர்க்க இதுவே சரியான நேரம் என்று கருதுகின்றன.
“மேலும் இதற்கு முன்னர் ஏற்க முன்வராத வேலை களை நிரப்புவதிலும் அவை கவனம் செலுத்துகின்றன.
“நிரந்தர வேலைக்கான காலியிடத்தை நிரப்பும்போது வர்த்தக நிலவரத்தை நிறுவனங்கள் கவனத்தில் கொள்கின்றன. பயிற்சிக்கு எடுக்கப்பட்டு இருப்போர் நிறுவனத்திற்கு நல்ல முறையில் பங்களிக்கக்கூடிய திறன் பெற்றிருக்கிறாரா என்பதையும் அவை கவனிக்கின்றன,” என்றார் திருவாட்டி டியோ.
ஜூலை 1 முதல் வாழ்க்கைத்தொழில் நிலையங்கள் தீவின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன. அங் மோ கியோ, பிடோக், புக்கிட் பாத்தோக், சுவா சூ காங், ஜூரோங் வெஸ்ட், செங்காங், உட்லண்ட்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் அவை அமைக்கப்பட்டுள்ளன.

Article Hard Regwall
 
Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
அண்மைய காணொளிகள்

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!