புதிய குடிமக்கள், நிரந்தரவாசிகள் எண்ணிக்கையில் மாற்றமில்லை

கடந்த ஐந்து­ ஆண்­டு­க­ளாக ஒவ்­வோர் ஆண்­டும் சுமார் 31,700 பேருக்கு சிங்­கப்­பூர் நிரந்­த­ர­ வா­சத் தகுதி அளிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் இந்த எண்­ணிக்கை நிலை­யா­கத் தொட­ரு­வ­தா­க­வும் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

அதே­போல இதே கால­கட்­டத்­தில் ஒவ்­வோர் ஆண்­டும் சரா­ச­ரி­யாக 22,100 புதிய குடி­மக்­கள் உரு­வாகி வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார். வெளி­நா­டு­களில் வசிக்­கும் சிங்­கப்­பூர் பெற்­றோர்­க­ளுக்கு ஆண்டுதோ­றும் சரா­ச­ரி­யாக 1,600 குழந்­தை­கள் பிறப்­ப­தா­க­வும் குமாரி இந்­தி­ராணி கூறி­னார்.

புக்­கிட் பாஞ்­சாங் தனித்­தொ­குதி உறுப்­பி­னர் லியாங் எங் ஹுவா­வும் செம்­ப­வாங் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் குமாரி போ லி சானும் எழுப்­பிய வினாக்­க­ளுக்கு அவர் பதி­ல­ளிக்­கை­யில் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

பெரும்­பா­லான வளர்ந்த பொரு­ளி­யல் நாடு­களில் உள்­ள­து­போல சிங்­கப்­பூர் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் மொத்த பிள்­ளை­பி­றப்பு விகி­த­மும் 2.1 விழுக்­காட்­டுக்­கும் குறை­வாக உள்­ள­தென்­றும் அமைச்­சர் கூறி­னார். கடந்த ஆண்­டும் அதற்கு முந்­திய ஆண்­டும் அந்த விகி­தம் 1.14 விழுக்­காடு என்றே தொட­ரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

“மக்­கள்­தொ­கை­யைப் பொறுத்­த­வரை சிங்­கப்­பூ­ருக்கு எந்­த­வோர் இலக்கோ குறிப்­பிட்­ட­தொரு எண்­ணிக்­கையை அடைய வேண்­டும் என்ற எண்­ணமோ இல்லை,” என்று எடுத்­து­ரைத்­தார் தேசிய மக்­கள்­தொகை மற்­றும் திற­னா­ளர் பிரி­வுக்­குப் பொறுப்­பேற்­றி­ருக்­கும் அமைச்­ச­ரு­மான குமாரி இந்­தி­ராணி.

“பிறப்பு விகி­தம், ஆயுட்­கா­லம் போன்ற பல்­வேறு கார­ணி­க­ளால் சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யின் அளவு பாதிக்­கப்­ப­டு­கிறது. அவற்­று­டன் உலக நில­வ­ரங்­கள் குடிநு­ழை­வை­யும் வேலை­வாய்ப்­பை­யும் பாதிக்­கின்­றன.

“சிங்­கப்­பூ­ரின் ஒட்­டு­மொத்த மக்­கள்­தொகை அளவு 2030ஆம் ஆண்­டு­வாக்­கில் 6.9 மில்­லி­ய­னுக்­கும் குறை­வா­கவே இருக்­கக்­கூ­டும் என்று கடந்த 2018ஆம் ஆண்டு அர­சாங்­கம் ஒரு மதிப்­பீட்டை தெரி­வித்­தது. அந்­தக் கணிப்பு இன்­றைக்­கும் மாற்­ற­மின்றி தொட­ரு­கிறது.

“சிங்­கப்­பூ­ரைத் தங்­கள் இல்­ல­மாக ஆக்­கிக்­கொண்டு இங்­குள்­ள­வர்­க­ளு­டன் ஒன்­று­க­லந்து நாட்­டுக்­குப் பங்­க­ளிக்­கக் கடப்­பாடு கொண்­ட­வர்­க­ளுக்கே குடி­யு­ரி­மை­யும் நிரந்­த­ர­வா­சத் தகு­தி­யும் வழங்­கப்­ப­டு­கின்­றன. சிங்­கப்­பூ­ரர்­க­ளு­டன் குடும்ப உற­வு­க­ளைக் கொண்­டோர் அல்­லது இங்கு சில காலம் தங்கி, படித்து, வேலை செய்­வோர் புதிய குடி­மக்­கள் ஆகி­றார்­கள். குடி­யு­ரிமை பெற தீவிர கடப்­பாடு கொண்ட, தகு­தி­யுள்ள நிரந்­த­ர­வா­சி­களில் இருந்து புதிய குடி­மக்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்ப­டு­கி­றார்­கள்,” என்று மன்­றத்­தில் விளக்­கி­னார் அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!