வீவக வீட்டு மறுவிற்பனை குறித்து அமைச்சர் டெஸ்மண்ட் லீ விளக்கம்: $1 மில்லியனுக்கு கைமாறிய வீடுகள் 0.3% மட்டுமே

இவ்­வாண்டு மறு­விற்­ப­னைச் சந்­தை­யில் கைமா­றிய வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) வீடு­களில், குறைந்­தது $1 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்ட வீடு­கள் 0.3 விழுக்­காடு மட்டுமே என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்­துள்­ளார்.

இவ்­வாண்டு ஆகஸ்ட் நில­வ­ரப்­படி கைமா­றிய 14,400 மறு­விற்­பனை வீடு­களில் 38 வீடு­கள் குறைந்­தது $1 மில்­லி­ய­னுக்கு விற்­ப­னை­யா­கின.

குறிப்­பிட்ட சில குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் வீவக வீடு­கள் குறைந்­தது $1 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டது குறித்து அங் மோ கியோ குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கான் தியாம் போ கேட்ட கேள்­விக்கு திரு லீ பதி­ல­ளித்­த­போது இவ்­வாறு கூறி­னார்.

கடந்த மாதம் எட்டு வீவக மறு­விற்­பனை வீடு­கள் குறைந்­தது $1 மில்­லி­ய­னுக்கு கைமா­றி­ய­தாக சொத்து நிறு­வ­ன­மான எஸ்­ஆர்­எக்ஸ் தக­வல் வெளி­யிட்­டி­ருந்­தது. தஞ்­சோங் பகா­ரில் ‘தி பினக்­கல்@டக்ஸ்­டன்’ கட்­ட­டத்­தில் உள்ள ஐந்தறை வீடு ஒன்று ஆக அதி­க­மாக $1.26 மில்­லி­ய­னுக்கு விலை போனது.

கடந்த ஆண்டு 64 வீடு­களும் 2018ல் 71 வீடு­களும் குறைந்­தது $1 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டன.

தேவைக்­கேற்ப கட்டி விற்­கப்­படும் (பிடிஓ) வீட்டு விலை குறித்­துப் பேசிய அமைச்­சர் லீ, அவை இடை­நிலை வரு­டாந்­திர குடும்ப வரு­மா­னத்­தை­விட ஐந்து மடங்­கிற்­கும் குறை­வாக இருப்­ப­தா­கச் சொன்­னார். ஒப்­பு­நோக்க, உல­கின் மற்ற முக்­கிய நக­ரங்­களில் வீட்டு விலை வரு­டாந்­திர குடும்ப வரு­மா­னத்­தை­விட கிட்­டத்­தட்ட 10 அல்­லது 20 மடங்­காக உள்­ளதை அவர் சுட்­டி­னார்.

புதிய வீட்டு விலையை நிர்­ண­யிப்­ப­தில், அந்த வீட்­டின் சிறப்­பம்­சங்­கள், அக்­கம்­பக்­கத்­தில் உள்ள மறு­விற்­பனை வீட்டு விலை, சந்தை நில­வ­ரம் போன்ற அம்­சங்­கள் கருத்­தில்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

முதன்­மு­றை­யாக வீடு வாங்­கு­வோர், $80,000 வரை­யி­லான மேம்­படுத்­தப்­பட்ட மத்­திய சேம நிதி வீட­மைப்பு மானி­யத்­தைப் பயன்­ப­டுத்­த­லாம் என்­றார் திரு லீ.

இதற்­கி­டையே, இவ்­வாண்டு முதற்­பா­தி­யில் விற்­ப­னைக்கு விடப்­பட்ட 1,000 ஈரறை ‘ஃபிளெக்சி’ வீடு­களில் ஏறக்­கு­றைய 80 விழுக்­காடு விற்­கப்­பட்­டு­விட்­ட­தாக தேசிய வளர்ச்சி இரண்­டாம் அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். அவற்­றில் 90 விழுக்­காட்­டிற்­கும் அதி­க­மா­ன­வற்றை ஒற்­றை­யர்­களும் மூத்­தோ­ரும் வாங்­கி­ய­தாக அவர் சொன்­னார்.

ஆகஸ்ட் மாதம் வெளி­யி­டப்­பட்ட ‘பிடிஓ’ திட்­டத்­தில் மேலும் 1,800 ஈரறை ‘ஃபிளெக்சி’ வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்­பட்­டன.

வீட்­டுக் கடன் தவணை: 2,500 குடும்­பங்­க­ளுக்கு வீவக உதவி

இந்­நி­லை­யில், இவ்­வாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, வீட்­டுக் கட­னைச் செலுத்த ஏறத்­தாழ 2,500 குடும்­பங்­க­ளுக்கு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் உத­வி­ய­தாக அமைச்­சர் லீ தெரி­வித்­தார்.

அவற்­றில் 864 குடும்­பங்­கள் வீட்­டுக் கடன் தவ­ணையை ஒத்தி­வைத்­தன. மேலும் 277 குடும்­பங்­கள் செலுத்­தும் மாதாந்­தி­ரக் கடன் தொகை­யைக் குறைத்­துக்­கொண்­டன.

கொவிட்-19 சூழ­லால் ஆட்­குறைப்பு, வேலை­யின்மை விகி­தம் அதி­க­ரித்­துள்­ள­தைத் தொடர்ந்து, வீட்­டுக் கடன் தவ­ணையை ஒத்­தி­வைக்க எத்­தனை குடும்­பங்­கள் வீவ­க­வி­டம் கோரி­யுள்­ளன என்­பது குறித்து அங் மோ கியோ குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இங் லிங் லிங் கேட்ட கேள்­விக்கு அமைச்­சர் லீ அளித்த எழுத்­து­பூர்வ பதி­லில் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!