சிறையிலிருந்து விடுதலையான மூன்று மாதங்களில் பாதிக்கும் அதிகமானோருக்கு வேலைகள் கிடைப்பதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
மத்திய சேம நிதி பங்களிப்பு பெறாத வாடகை கார் ஓட்டுநர்கள், உணவு விநியோகம் போன்ற வேலைகளைச் செய்வோர் அந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றார் அவர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த விகிதம் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருப்பதைச் சுட்டினார் அவர்.
முன்னாள் குற்றவாளிகள் திரும்ப வேலைக்குச் செல்வது அவர்களின் மறுவாழ்வுக்கு மிகவும் முக்கியம் என்று அமைச்சர் சண்முகம் நேற்று நாடாளுமன்றத்தில் சொன்னார்.

