பணியமர்த்தும் திட்டங்கள் மூலம் 7,000 பேர் வேலையில் சேர்ந்தனர்

ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்தி அவர்­க­ளுக்­குப் பயிற்­சி­ய­ளிக்­கும் திட்­டங்­கள் மூலம் கடந்த ஆண்டு ஏறத்­தாழ 7,000 பேர் பணி­ய­மர்த்­தப்­பட்­ட­தாக கல்வி துணை அமைச்­சர் கான் சியாவ் ஹுவாங் தெரி­வித்­துள்­ளார். இந்தத் திட்­டங்­க­ளின்­கீழ் ஊழி­யர்­க­ளுக்­குத் திறன் பயிற்சி அளிப்­பதற்கு முன்­ன­தா­கவே அவர்­கள் பணி­யில் சேர்க்­கப்­ப­டு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்பு, ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்பு ஆத­ர­வ­ளிக்­கும் நிபு­ணத்­துவ உரு­மாற்­றுத் திட்­டங்­களின்­கீழ் ஊழி­யர்­கள் பணி­ய­மர்த்­தப்­பட்­ட­னர். இயோ சூங் காங் தனித்­தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் யிப் ஹோன் வெங் கேட்ட கேள்­வி­க­ளுக்கு நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் பதி­ல­ளித்­த­போது திரு­மதி கான் இத­னைத் தெரி­வித்­தார்.

ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்­சி­ய­ளித்து அவர்­க­ளைப் பணி­ய­மர்த்­தும் திட்­டங்­கள் மூலம் கடந்த ஆண்டு மேலும் 2,400 பேர் வேலை­யில் சேர்க்­கப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார். இந்­தத் திட்­டங்­களில் பங்­கேற்­றோர் பயிற்சி வழங்­கு­நர்­க­ளி­ட­மி­ருந்து பயற்சி பெற்று பின்­னர் பணி­ய­மர்த்­தப்­பட்­ட­னர்.

கடந்த ஆண்டு ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் பயிற்­சித் திட்­டங்­களில் பங்­கேற்­ற­வர்­க­ளின் எண்­ணிக்கை குறித்து திரு யிப் கல்வி அமைச்­சி­டம் கேட்­டார். பயிற்­சித் திட்­டங்­க­ளின் முடிவு குறித்து அமைச்சு எவ்­வாறு கணக்­கி­டு­கிறது என்­பது குறித்­தும் அவர் கேட்­டார்.

அதற்­குப் பதி­ல­ளித்த திரு­மதி கான், பயிற்சி வகுப்­பு­க­ளின் தரத்­தைக் கண்­ட­றிய ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்பு கருத்­தாய்­வு­களை நடத்­து­வ­தா­கக் குறிப்­பிட்­டார். மேலும் வேலை, கல்­வித் திட்­டம் தொடர்­பி­லும் ஆய்வு நடத்­தப்­ப­டு­வ­தாக அவர் சொன்­னார்.

கடந்த ஆண்டு வேலை, கல்­வித் திட்­டத்தை முடித்த ஆறு மாதங்­களில் 87 விழுக்­காட்­டி­னர் முழு நேர வேலை­யில் சேர்ந்­தி­ருப்­பது ஆய்­வில் தெரிய வந்­துள்­ள­தாக அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!