சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிடமிருந்து 29,410 வெள்ளியைக் கையாட, தான் வேலை செய்த மாணவர் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளருக்கு உதவினார் 50 வயது தல்ஜிட் கோர் யிந்தர் சிங். பொய்யான தகவல்களைக் கொண்ட ஆவணங்களை அமைச்சிடம் சமர்ப்பித்த குற்றச்சாட்டை நேற்று ஒப்புக்கொண்ட தல்ஜிட்டுக்கு நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆவணங்களில் இருந்த தகவல்களைக் கொண்டு அமைச்சு தொடர்ந்து 12 பிள்ளைகளுக்கான மானியத் தொகையைப் பராமரிப்பு நிலையத்திற்கு வழங்கி வந்தது.
ஆனால் 'மாணவர் பராமரிப்புக் கட்டண உதவித்' திட்டத்தின் கீழ் இருப்பதாகக் கூறப்பட்ட அந்த 12 பிள்ளைகளும் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பராமரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டனர்.
வெளியேறிய தகவலை முறைப்படி தல்ஜிட் அமைச்சிடம் தெரிவித்திருக்க வேண்டும்.
மானியத் தொகையை வழங்குவதை அமைச்சு உடனே நிறுத்தியிருக்கும். ஆனால் அவர் அவ்வாறு தெரிவிக்கவில்லை.

