உடல் இளைப்பு மாத்திரைக்குத் தடை

பரு­ம­னைக் குறைக்க வைப்­ப­தற்­கான மாத்­திரை ஒன்­றுக்கு சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் தடை விதித்­துள்­ளது.

மோன் மச்சா கொக்கோ என்­னும் அந்த மாத்­தி­ரை­யில் உள்ள ரசா­ய­னப் பொருள் மார­டைப்பு, பக்­க­வா­தம் போன்ற பின்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என்று சோத­னை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. சிங்­கப்­பூ­ரில் முன்­ன­தாக சிபுட்­ரா­மின் என்­னும் மருந்து, உடல் இளைப்­புக்­காக பரிந்­து­ரைக்­கப்­பட்­டது. பின்­னர் அது 2010ஆம் ஆண்­டில் தடை செய்­யப்­பட்­டது. சிபுட்­ரா­மின் மருந்து உண்­ப­வர்­கள் தூக்­க­மின்மை, காது­கேளாமை, மனக்­கோ­ளாறு போன்ற பக்­க­வி­ளை­வு­க­ளால் அவ­திப்­பட்­ட­தை­ய­டுத்து அந்த மருந்­துக்­குத் தடை செய்­யப்­பட்­டது.

அதே­போல் இப்­போது மோன் மச்சா மாத்­தி­ரைக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. முன்­ன­தாக அந்த மருந்தை வாங்கி வைத்­தி­ருந்து பயன்­ப­டுத்தி வரு­ப­வர்­கள் அதை உட­ன­டி­யாக நிறுத்­தி­வி­டு­மாறு ஆணை­யம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது. இந்த மாத்­தி­ரையை உட்­கொண்ட பலர், அதி­க­ள­வில் தாக­மெ­டுப்­பது, இத­யம் வேக­மா­கத் துடிப்­பது போன்ற அனு­ப­வங்­க­ளைப் பெற்­ற­தாக புகார்­கள் வந்­த­தாக ஆணை­யம் தெரி­வித்­தது. அதே­போல் இந்த மாத்­தி­ரையை வழக்­க­மாக உட்­கொண்ட இன்­னொ­ரு­வர் கூறிய புகா­ரின் அடிப்­ப­டை­யில், உடல்­கொ­ழுப்­பைக் குறைப்­ப­தற்­குப் பதில் வளர்­சிதை மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­கிறது என்­ப­தும் தெரி­ய­வந்­தது. இந்த மாத்­திரை க்யூ10, கரௌ­செல், லஸாடா ஆகிய இணைய வர்த்­த­கத் தளங்­கள் மூல­மும் ஃபேஸ்புக், இன்ஸ்­ட­கி­ராம் போன்ற சமூக ஊட­கங்­கள் மூல­மும் விற்­கப்­பட்டு வந்­தன.

மோன் மச்சா கொக்கோ மாத்­தி­ரை­களை விற்­பதை உட­ன­டி­யாக நிறுத்­தும்­படி விற்­ப­னை­யா­ளர்­களுக்கு ஆணை­யம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. அத்­து­டன் இணைய வர்த்­தக நிறு­வ­னங்­க­ளுக்­கும் அந்­தப் பொருட்­கள் பற்­றிய விவ­ரங்­களை நீக்­கும்­ப­டி­யும் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இந்த மாத்­தி­ரை­யைத் தொடர்ச்­சி­யாக உட்­கொண்டு வந்­த­வர்­கள், உடல்­நி­லை­யில் மாற்­றம் ஏதும் தென்­பட்­டால் உட­ன­டி­யாக மருத்­து­வரை அணு­கும்­படி ஆணை­யம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது. “உடல் எடை­யைக் குறைப்­பது என்­பது மிக எளி­தாக, உட­ன­டி­யாக நடக்­கும் செயல் அன்று. அதற்கு சீரான உண­வுப் பழக்­க­மும் தேவை­யான உடற்­ப­யிற்­சி­யும் வேண்­டும். அவையே உடல் எடை­யைக் குறைக்க உத­வும்,” என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!