சிங்கப்பூர் - ஹாங்காங் சிறப்புப் பயண ஏற்பாடு

பொழு­தைக் கழிக்­க­வும் பிற கார­ணங்­க­ளுக்­கா­க­வும் சிங்­கப்­பூர்- ஹாங்­காங் இடையே இரு­த­ரப்­புப் பய­ணங்­களை அனு­ம­திக்­கும் வகை­யில் சிறப்புப் பயண ஏற்­பாட்­டிற்கு இரு நாடு­களும் உடன்­பட்­டுள்­ளன. இதைத் தொடர்ந்து, இவ்­விரு நாடு­க­ளுக்கு இடையே பய­ணம் செய்­வோர் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டி­யி­ராது. அதே வேளை­யில், பரி­சோ­த­னை­யில் தொற்று இல்லை என முடிவு கிட்டி இருக்க வேண்­டும் என்­பது போன்ற வேறு சில நிபந்­த­னை­கள் விதிக்கப்­ப­ட­லாம்.

இது சிறிய அள­வி­லான நட­வடிக்கை என்­ற­போ­தும் விமா­னப் போக்­கு­வ­ரத்து மையங்­க­ளா­கத் திகழும் இவ்விரு நாடு­க­ளைப் பொறுத்த மட்­டி­ல் குறிப்­பி­டத்­த­க்க நட­வடிக்கை என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் தெரிவித்து இருக்கிறார்.

இரு நாடு­க­ளி­லும் கொவிட்-19 பர­வல் அபா­யம் குறை­வாக இருப்­பதை அமைச்­சர் ஓங் சுட்­டி­னார். உடன்­பாட்­டின்­படி, புறப்­பாட்­டிற்­கு ­முன் பய­ணி­கள் கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டி இருக்கும் எனத் தெரிகிறது. யார் யார் பயணம் செய்யலாம், பயணத் திட்டம், பயண நோக்கம் என வேறு எந்தக் கட்டுப்பாடுகளும் இராது.

ஹாங்­காங்­கில் அல்­லது வேறு நாடு­களில் தொற்று கூடி­னால் சிங்கப்­பூர் எத்­த­கைய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்­கும் என அமைச்­ச­ரி­டம் கேட்­கப்­பட்­டது. அதற்கு, “பொது­வான புரி­தல் இருக்க வேண்­டும். எல்­லா­ருமே கொரோனா நோய்ப் பர­வ­லைக் கட்டுப்­ப­டுத்த விரும்­பு­கி­றோம். ஆயினும், எதிர்­பா­ரா­தவி­த­மாக கிரு­மித்­தொற்று அதி­க­ரித்­தால், பயண ஏற்­பாட்­டைத் தற்­கா­லிகமாக நிறுத்த வேண்­டி­யி­ருக்­கும் என நினைக்­கிறேன்,” என்று திரு ஓங் பதில் கூறினார்.

இந்­தத் திட்­டம் படிப்­ப­டி­யா­க­வும்­முன்­னெச்­ச­ரிக்­கை­யு­ட­னும் நிதா­ன­மா­க­வும் பாது­காப்­பா­க­வும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

“ஆனாலும் நமது விமானப் போக்குவரத்துத் துறையைத் திறக்க வேண்டியுள்ளது. அதற்கு முயற்சி செய்ய வேண்டியுள்ளது” என்றார் அமைச்சர்.

சிங்கப்பூர் சிறப்புப் பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டுள்ள பத்தாவது நாடு ஹாங்காங்.

இதற்­கு­முன் நியூ­சி­லாந்து, புருணை, ஆஸ்­தி­ரே­லியா (விக்­டோ­ரியா மாநி­லம் தவிர்த்து), வியட்­னாம், மலே­சியா, சீனா, தென்­கொ­ரியா, ஜப்­பான், இந்­தோ­னீ­சியா போன்ற நாடு­க­ளு­டன் சிங்­கப்­பூர் சிறப்­புப் பயண ஏற்­பா­டு­க­ளைச் செய்து கொண்­டுள்­ளது.

ஹாங்­காங்­கில் இது­வரை 5,200க்கு மேற்­பட்டவர்களை கொரோனா தொற்­றி­விட்­டது; 105 பேர் இறந்­து­விட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!