விளையாட்டுத் துறைக்கு மேலும் $25 மில்லியன்; மீள்திறன் திட்டம் அறிவிப்பு

சிங்­கப்­பூ­ரின் விளை­யாட்டு தொழில்­து­றைக்கு மேலும் ஊக்­க­மூட்­டும் வகை­யில் $25 மில்­லி­யன் விளை­யாட்டு மீள்­தி­றன் திட்­டம் அறி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

கலா­சார, சமூக இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் இதனை அறி­வித்­தார்.

இந்­தத் திட்­டத்­தில் $13.5 மில்­லி­யன் செயல்­சார்பு மானி­ய­மாக நிறு­வ­னங்­க­ளுக்குக் கொடுக்­கப்­படும். இது அக்­டோ­பர் முதல் 2021 மார்ச் வரை கிடைக்­கும். $11.5 மில்­லி­யன் தொகை இந்­தத் தொழில்­து­றை­யின் ஆற்­ற­லைப் பெருக்­கு­வதற்­கா­கச் செல­வி­டப்­படும்.

இந்­தக் கூடு­தல் உத­வி­யை­யும் சேர்த்து விளை­யாட்டுத் தொழில்­துறைக்கு அர­சாங்­கம் $50 மில்­லி­யன் ஆத­ரவு அளிக்­கிறது.

இந்­தத் துறைக்கு கடந்த ஜூன் மாதம் $25 மில்­லி­யன் நிவா­ரண நட­வ­டிக்­கை­கள் அறி­விக்­கப்­பட்­டன.

சிங்­கப்­பூ­ரில் வலு­வான விளை­யாட்டு வீரர்­கள் அணியைப் பலப்­படுத்­து­வ­தற்­கான ஒட்­டு­மொத்த முயற்­சி­களில் பல அமைப்­பு­களும் முக்­கி­ய­மான பங்­காற்­று­வ­தா­கக் குறிப்­பிட்ட திரு டோங், புதிய ஊக்கு­விப்­புத் திட்­டத்­தின் செயல்­சார்பு மானி­யத்­திற்­கான நிபந்­த­னை­களும் நடை­மு­றை­களும் நவம்­ப­ரில் அறி­விக்­கப்­படும் என்றார்.

இந்­தத் தொழில்­து­றை­யைச் சேர்ந்த பல துறை­களில் மின்­னிலக்க ஆற்­றலை மேம்­ப­டுத்­து­வதற்­காக நிறு­வ­னங்­க­ளுக்­கும் சுய­வேலை பார்ப்­போ­ருக்­கும் ஆத­ரவு கிடைக்­கும்.

விளை­யாட்டு பயிற்­று­விப்­பா­ள­ருக்குப் பயிற்சி ஊக்­கத்­தொ­கை­யும் கிடைக்­கும்.

சிங்­கப்­பூ­ரில் விளை­யாட்­டு­க­ளுக்­கும் விளை­யாட்­டு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கும் ஆண்­டு­தோ­றும் $400 மில்­லி­யனை அர­சாங்­கம் முத­லீடு செய்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!