என்டியுசி: குறைந்தபட்ச ஊதியம் தேர்தல் வாக்கு பேரமாகிவிடும்

சிங்­கப்­பூ­ரில் குறைந்­த­பட்­ச ஊதி­யம் என்ற பொது­வான ஓர் ஏற்­பாட்டை நடப்­புக்குக் கொண்டு வர­லாம் என்று பாட்­டா­ளிக் கட்சி யோசனை தெரி­வித்து உள்­ளது.

ஆனால் அந்த யோச­னையை அமல்­ப­டுத்­தி­னால் ஊழி­யர்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் மோச­மான நிலைமை ஏற்­பட்­டு­வி­டும் என்று என்­டி­யுசி துணைத் தலை­மைச் செய­லா­ளர் கோ போ கூன் நாடா­ளு­மன்­றத்­தில் விளக்­கி­னார். அத்­த­கைய குறைந்­த­பட்ச ஊதிய முறை இருந்­தால் அது தேர்­த­லில் வாக்­கு­வேட்­டைக்­கான பேரமாகிவி­டும் என்றாரவர்.

துப்­பு­ரவு, பாது­கா­வல், நில­வடி­வமைப்பு ஆகிய தொழில்­து­றை­களைப் பொறுத்­த­வ­ரை­யில் படிப்­படி­யாக உய­ரும் சம்­பள முறை கட்­டா­ய­மா­ன­தாக இருக்­கிறது. அர­சாங்­கத்­தின் இந்­தக் கொள்கை கார­ண­மாக, குறைந்த ஊதிய ஊழி­யர்­களில் பெரும்­பாலா­னோர் மாதம் $1,300க்கும் அதிக தொகை­யைச் சம்­ப­ள­மா­கப் பெறு­கி­றார்­கள். இதர துறை­களில் உள்ள இத்­த­கைய ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம் உய­ர­வும் அர­சாங்க கொள்­கை­கள் உதவி வந்­தி­ருப்­ப­தாக டாக்­டர் கோ விளக்­கி­னார்.

கொவிட்-19க்கு பிறகு இன்­னும் வலு­வான நாடாக மீண்டு எழு­வ­தற்­கான அர­சாங்­கத்­தின் உத்திகள் பற்றி நாடா­ளு­மன்­றத்­தில் விவா­தம் நடந்­தது. அதில் பாட்­டா­ளிக் கட்­சி­யின் குறைந்­த­பட்ச சம்­பள யோசனை பற்றி விவா­திக்­கப்­பட்­டது.

எல்லா துறை­களுக்­கும் குறைந்­த­பட்­சம் $1,300 சம்­ப­ளம் என்று நிர்­ண­யிக்­க­லாம் என பாட்­டா­ளிக் கட்சி தெரிவித்­துள்­ளது. நடந்து முடிந்த பொதுத் தேர்­த­லில் அந்­தக் கட்­சி­யின் தேர்­தல் அறிக்­கை­யி­லும் இது இடம்­பெற்றது.

இதற்கு ஆத­ர­வாக நேற்று பாட்­டா­ளிக் கட்­சி­யைச் சேர்ந்த நாடாளு­மன்ற எதிர்த்­த­ரப்புத் தலை­வர் பிரித்­தம் சிங்­கும் அந்­தக் கட்­சி­யின் இதர இரண்டு உறுப்­பி­னர்­களும் குரல் கொடுத்­த­னர். மசெக உறுப்­பி­னர்­களும் இந்த விவா­தத்­தில் சேர்ந்­து­கொண்­ட­னர். எல்­லா­ருக்­கும் ஏற்­பு­டைய குறைந்­த­பட்ச சம்­ப­ளத்தை நிர்­ண­யிப்­பது என்­பது சிர­ம­மா­னது என்று சுகா­தார மூத்த துணை அமைச்­ச­ரு­மான டாக்­டர் கோ குறிப்­பிட்­டார்.

குறைந்­த­பட்ச சம்­பள ஏற்­பாடு நடப்­பில் இருந்­தால் அர­சி­ய­லில் அது பிர­தி­ப­லிக்­கும். வாக்­கு­க­ளைப் பெறும் நோக்­கத்­துக்கு அது பயன்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்­றும் டாக்டர் கோ விளக்­கி­னார். அத்­த­கைய ஓர் ஏற்­பாடு நிறு­வ­னங்­க­ளுக்­குக் கட்­டுப்­ப­டி­யா­காத நிலையை ஏற்­ப­டுத்­தி­வி­டும் ஆபத்­தும் இருக்­கிறது. அத­னால் குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளின் வேலை­க­ளுக்­கும் ஆபத்து வர­லாம் என்று டாக்­டர் கோ எச்­ச­ரித்­தார்.

இதற்­குப் பதி­ல­ளித்த பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­னர்­கள் குறைந்­த­பட்ச ஊதி­யத்­தை சுயேச்­சை­யான ஒரு குழு நிர்­ண­யிக்­க­லாம் என்­றும் குடும்­பத்­தின் சரா­சரி செல­வி­னம் போன்ற புள்­ளி­வி­வ­ரங்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு அது நிர்­ண­யிக்­கப்­ப­ட­லாம் என்­றும் இதன் மூலம் அப்­ப­டிப்­பட்ட ஒரு நிலையை தவிர்த்­துக்கொள்ள முடி­யும் என்­றும் வாதிட்­ட­னர்.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறை கட்­டா­ய­மாக இல்­லாத தொழில்­து­றை­க­ளைப் பொறுத்த வரை­யில் அந்­தத் துறை­க­ளுக்­குத் துறை­வா­ரி­யான சம்­பள அள­வீ­டு­களை நிர்­ண­யிக்­க­லாம் என்­றும் டாக்­டர் கோ யோசனை கூறி­னார்.

குறைந்த ஊழி­யர்­க­ளுக்கு உதவ மேலும் பல­வற்­றைச் செய்ய வேண்­டும், செய்ய முடி­யும். ஆனால் இதில் பிரச்­சி­னையை மேலும் பெரி­தாக்­கி­வி­டக்­கூ­டாது என்ற டாக்டர் கோ, குறைந்த வரு­மான சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உதவி அவர்­களைக் கைதூக்­கி­வி­டு­வ­து­தான் எப்­போ­துமே மக்­கள் செயல் கட்சி அர­சாங்­கத்­தின் அடிப்­படை இலக்­காக இருந்து வந்­துள்­ளது என்­பதைச் சுட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!