'தொழிற்சாலை வெளியேற்றும் வாடை தீங்கில்லை'

1 mins read
29a7787b-b359-4daf-b3cc-af0cf84b26d5
படம்: GOV.SG -

ஜூரோங்கில் செயல்படும் சில தொழிற்சாலைகள் வெளியேற்றும் வாடை பொதுவாக மனித உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிப்பவை அல்ல என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார்.

தேசிய சுற்றுப்புற வாரியம் காற்று நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மேற்குப் பகுதியின் காற்றுத்தரம் வழக்கமான நிலையிலேயே இருந்து வந்ததாகவும் டாக்டர் கோர் குறிப்பிட்டார்.

தூய்மைக் கட்டுப்பாட்டுச் சாதனத்தைப் பொருத்தி வாயுக் கழிவுகள் முறையாக சுத்திகரிக்கப்பட்டு பிறகுதான் அவை காற்று மண்டலத்தில் கலக்கிறது என்பதை ஆலைகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.