நீக்குப்போக்கான வேலை முறை: 2019ல் 85% முதலாளிகள் நடைமுறைப்படுத்தினர்

சிங்­கப்­பூ­ரில் நீக்­குப்போக்­கான வேலை ஏற்­பா­டு­கள் பரவ­லாக நடை­மு­றை­யில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்­த­கைய ஓர் ஏற்­பாட்டை 85% முத­லா­ளி­கள் முறை­யாக அல்­லது அப்­போதைக்கு அப்­போது நடைமுறைப்படுத்தி இருக்­கி­றார்­கள் என்று மனிதவள துணை அமைச்­சர் கான் சியோ ஹுவாங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

ஜாலான் புசார் குழுத்தொகுதி உறுப்­பி­னர் டாக்­டர் வான் ரிஸால் ஸக்­ரி­யா­வுக்­குப் பதில் அளித்து அமைச்­சர் பேசி­னார்.

வீட்­டில் இருந்து வேலை செய்­வது, பகுதி நேர வேலை, மாறு­பட்ட வேலை நேரம் ஆகி­யவை அத்­த­கைய ஏற்­பாட்­டில் உள்­ள­டங்­கும். அத்­த­கைய ஏற்­பா­டு­கள் தொடர்­பான முத்­த­ரப்பு அளவீட்டை 7,000க்கும் அதிக நிறு­வ­னங்­கள் நடப்­புக்­குக் கொண்டு வந்­துள்­ள­தா­க­வும் திரு­வாட்டி கான் கூறி­னார்.

இந்­தத் தரத்தை உறு­திப்­ப­டுத்­தும் வழி­காட்டி நெறி­மு­றை­களை மனி­த­வள அமைச்­சும் என்­டி­யு­சி­யும் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­ன­மும் உரு­வாக்கி இருக்­கின்­றன.

வேலை-வாழ்க்கை இரண்­டுக்­கும் இடை­யில் சிறந்த சம­நி­லை­யை ஊழி­யர்கள் கட்­டிக்­காக்க உத­வி­யாக வேலை இடத்­தில் நல்ல வேலை­ நி­ய­மன நடை­மு­றை­கள் இருப்­பதை அந்த முத்­த­ரப்­பு வழி­காட்டி நெறி­மு­றை­கள் உறுதி செய்­கின்றன.

நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பாட்டை நடப்­புக்­குக் கொண்­டு­வ­ரும்­படி தனது அமைச்சு தொடர்ந்து வலி­யு­றுத்தி வரும் என்­றும் திரு­வாட்டி கான் தெரி­வித்­தார்.

வேலை இடத்­துக்­குத் திரும்­பும்­படி முன்­னி­லும் அதி­க­மான ஊழி­யர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றார்­கள் என்­றா­லும் சில முத­லா­ளி­கள் தங்­கள் ஊழி­யர்­களை தேவைப்­படும்போது மட்­டும் அலு­வ­ல­கம் வந்­தால் போதும் என்று சொல்லி வீட்­டில் இருந்­த­ப­டியே வேலை பார்க்க அனு­ம­தித்து இருக்­கி­றார்­கள் என்று துணை அமைச்­சர் தெரி­வித்­தார்.

nவீட்­டில் இருந்து வேலை செய்­வது சில சூழ்நிலைகளில் சாத்­தி­ய­மற்­றது என்­றாலும் தனது அமைச்சு நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பாட்டை தொடர்ந்து ஊக்­கு­வித்து வரும் என்று திரு­வாட்டி கான் நேற்று நாடாளு மன்றத்தில் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!