ரயில் சேவைத் தடை: எஸ்எம்ஆர்டி விளக்கம்

துவாஸ் லிங்க் - துவாஸ் வெஸ்ட் ரோடு நிலை­யங்­க­ளுக்கு இடையே மின்­கம்­பி­வ­டத்­தில் ஏற்­பட்ட மின்­காப்­புப் பிரச்­சி­னை­யைச் சரி­செய்ய முயன்­ற­போது அது தொடர் விளைவு­களை ஏற்­ப­டுத்­தி­விட்­டதே நேற்று முன்­தி­னம் நிகழ்ந்த ரயில் சேவைத் தடைக்குக் கார­ணம் என எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் தெரி­வித்துள்ளது.

“மின்­காப்­புக் கோளாற்­றைத் தனி­மைப்­ப­டுத்­தும் வித­மாக துவாஸ் வெஸ்ட் ரோடு நிலை­யத்­தில் உள்ள ஒரு மின்­சுற்­றுத் தகர்ப்­பான் செயல்­பட்­டி­ருக்க வேண்­டும். அது செயல்­படா­மல் போன­தால் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு வழித்­த­டங்­க­ளுக்­கான மின்­வி­நி­யோக அமைப்பு துண்­டிக்­கப்­பட்­டது,” என்று எஸ்­எம்­ஆர்­டி­யின் அறிக்கை கூறி­யது.

மின்­வி­நி­யோ­கத்­தைச் சரி­செய்­வ­தற்­காக, போன விஸ்தா துணை மின்­நி­லை­யத்­தில் இருந்து மின்­சாரம் பெற முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது. ஆனால், கோளாற்­றைத் தனி­மைப்­ப­டுத்­தா­மல் அவ்­வாறு செய்ய முயன்­ற­தால் வட்ட ரயில் பாதைக்­கான மின்­சா­ர­மும் துண்­டிக்­கப்­பட்­டது.

“மின்­காப்­புக் கோளாற்றை அடை­யா­ளம் கண்டு, அதைத் தனி­மைப்­ப­டுத்­தி­ய­பின், மின்­சுற்­றுத் தகர்ப்­பா­னின் பழு­த­டைந்த பாகம் மாற்­றப்­பட்­டது,” என்று அந்த அறிக்கை குறிப்­பிட்­டது.

அந்­தப் பாகங்­கள் முன்­ன­தாகவே பழு­த­டை­வது குறித்து நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் மற்­றும் அதன் தயா­ரிப்­பா­ளர்­க­ளு­டன் இணைந்து விசா­ரணை மேற்­கொள்­ளப்­படும் என்­றும் எஸ்­எம்­ஆர்டி தெரி­வித்­துள்­ளது. அத்­து­டன், நேற்று முன்­தி­னம் நிகழ்ந்த சேவைத் தடைக்­காக அந்­நி­று­வ­னம் வருத்­தம் தெரி­வித்­துக்­கொண்­டது.

இத­னி­டையே, மெத்­த­ன­மாக இருக்­கக்­கூ­டாது என்­ப­தற்கு இந்தச் சம்­ப­வம் தமக்­கும் போக்­கு­வ­ரத்து சேவை வழங்­கு­நர்­க­ளுக்­கும் ஒரு நினை­வு­றுத்­த­லாக அமைந்­தது என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் குறிப்­பிட்­டார்.

சேவைத் தடை குறித்து அதிருப்தி தெரி­வித்து பலர் தமக்கு மின்­னஞ்­சல் அனுப்­பி­ய­தா­க­வும் அதே நேரத்­தில் எஸ்­எம்­ஆர்டி ஊழி­யர்­க­ளின் சேவைக்கு நன்றி தெரி­வித்­துக்­கொண்­ட­தா­க­வும் அமைச்­சர் ஓங் கூறி­னார்.

கடந்த ஆகஸ்ட்­டில் போக்­கு­வரத்து அமைச்­ச­ராக திரு ஓங் பத­வியேற்ற­பின் நிகழ்ந்த முதல் சேவைத் தடை இது. ரயில்கள் நேற்று வழக்­கம்­போல் இயங்­கின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!