சிங்கப்பூரைச் சேர்ந்த 23 ரொட்டி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து நேற்று 7,000 ரொட்டிகளைத் தயாரித்தன.
இதுவே சிங்கப்பூரில் ஒரே நாளில் தயாரிக்கப்பட்டுள்ள ஆக அதிகமான ரொட்டிகள்.
இந்த ரொட்டிகள் பிறகு 70 மீட்டர் நீள ரொட்டியாக அடுக்கி வைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
இந்த முயற்சிக்கு கிரியேட்டிவ் சமையல் பள்ளி தலைமை தாங்கியது.
தேவன் நாயர் வேலை நியமன, வேலை வாய்ப்புக் கழகத்தில் நடைபெற்றது.
தயாரிக்கப்பட்ட ரொட்டிகள் அனைத்தும் 'ஃபுட் ஃபார் தி ஹார்ட்' அமைப்புக்கு நன்கொடை செய்யப்பட்டது.
அங்கிருந்து ஏழு அமைப்புகளுக்கு அவை விநியோகம் செய்யப்படும்.

