பட்ஜெட் 2020 பற்றுச்சீட்டு திருட்டு: எழுவர் கைது

1 mins read
152d9252-aca5-4b14-81b0-c8e13db7435b
படங்கள்: சிங்கப்பூர் போலிஸ் படை -
multi-img1 of 3

சிங்­கப்­பூர் எங்­கும் பல வட்­டா­ரங்­களில் கடந்த ஒரு வார­மாக அஞ்­சல்­பெட்­டி­க­ளைச் சேதப்ப­டுத்தி அவற்­றில் இருந்த பட்­ஜெட் 2020 மளி­கைப்­பொ­ருள் பற்­றுச்­சீட்­டு­க­ளைத் திரு­டி­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் ஏழு பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் நான்கு ஆட­வர்­களும் மூன்று பெண்­களும் அடங்­கு­வர். அவர்­கள் 23 வய­துக்­கும் 54 வய­துக்­கும் உட்­பட்­ட­வர்­கள். கைதா­ன­வர்­க­ளி­டையே எவ்­வித தொடர்­பும் இல்லை என்று ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் போலி­சார் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர். இது­போன்ற சம்­ப­வங்­கள் மற்ற குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­க­ளி­லும் நிகழ்ந்­தி­ருப்­ப­தாக போலி­சில் புகார் செய்­யப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்த விசா­ர­ணையை போலி­சார் முடுக்­கி­விட்­டுள்­ள­னர்.

அஞ்­சல்­பெட்­டி­கள் அரு­கில் சந்­தேக நபர்­க­ளைப் பார்த்­தால் உட­ன­டி­யாக 999 என்ற எண்ணை அழைக்­க­வும் என போலி­சார் பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

பட்­ஜெட் 2020 மளி­கைப்­பொ­ருள் பற்­றுச்­சீட்­டு­க­ளுக்­குத் தகுதி பெறு­ப­வர்­கள் அவற்­றைத் தங்­கள் அஞ்­சல்­பெட்­டி­க­ளி­லி­ருந்து கூடிய விரை­வில் எடுத்­து­வி­டும்­படி அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­ற­னர்.