தெம்பனிஸ் அஞ்சல் பெட்டிகளிலிருந்து திருடியவர்கள் மீது குற்றச்சாட்டு

தெம்பனிஸ் அஞ்சல் பெட்டிகளிலிருந்து திருடியவர்கள் மீது குற்றச்சாட்டு

1 mins read
c1dca8cc-10b5-4b2a-9fae-ca76a99d45a9
படம்: லியன்ஹ சாவ்பாவ் -

சிங்கப்பூரில் உள்ள பல வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளில் உள்ள அஞ்சல் பெட்டி களிலிருந்து பட்ஜெட் 2020 மளிகைப் பொருட் களுக்கான பற்றுச் சீட்டுகள் திருடுபோன சம்பவத்தில் தொடர் புடைய ஓர் ஆண், ஒரு பெண் ஆகியோர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மிக்கேல் வாஹியுதின் அப்துல்லா, 24, மீது மூன்று திருட்டுக் குற்றங்களும் இர்வானி நூர் அளிரா அஸாமி, 23, மீது இரண்டு திருட்டுக் குற்றங்களும் சாட்டப்பட்டன. அவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை கைது செய்யப் பட்டனர். அவர்கள் இருவரும் இம்மாதம் 6ஆம் தேதி இரவு 8 மணி முதல் 7ஆம் தேதி அதிகாலை 3.30 மணி வரை தெம்பனிஸ் ஸ்திரீட் 86, புளோக் 872ல் உள்ள அஞ்சல் பெட்டிகளைப் பலவந்தமாகத் திறக்க முற்பட்டனர்.

அவர்கள் இருவரும் இரண்டு அஞ்சல் பெட்டிகளிலிருந்து $10 மதிப்புள்ள 15 பற்றுச்சீட்டுகளைத் திருடினர் என்றும் அவற்றின் மதிப்பு $300 என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அவர்கள் இருவர் மீதான விசாரணை தொடர்கிறது என்பதால் அவர்கள் நவம்பர் 6ஆம் தேதி மீண்டும் நீதிமன் றத்தில் முன்னிலையாக வேண்டும். அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.