சமூக பராமரிப்பு ஊழியர்களுக்கு அதிக பயிற்சி இடங்கள், கற்றல் நிலையங்கள்

கொவிட்-19 தொற்­று­நோய் பர­வல் சூழ­லில் சமூ­கப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­கள் வேலை­யில் இருப்­ப­தற்கு உத­வும் முயற்­சி­யாக அவர்­களுக்கு வழங்­கப்­படும் பயிற்சி இடங்­க­ளின் எண்­ணிக்கை 20 விழுக்­காடு அதி­க­ரிக்­கப்­பட உள்­ளது. இது அவர்­கள் வாய்ப்­பு­களை அதி­கம் பெற உத­வும்.

ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட பரா­ம­ரிப்பு முகவை (ஏஐசி) அடுத்த ஆண்டு ஜன­வரி முதல், அல்­சை­மர் எனப்­படும் ஞாபக மறதி நோய் சங்­கம், டான் டோக் செங் மருத்­து­வ­மனை ஆகிய இரண்டு கூடு­தல் கற்­றல் நிறு­வ­னங்­களை நிய­மிக்­கும் என்று சுகா­தார மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன் தெரி­வித்­தார்.

இவற்­று­டன், ஏஐசி கட்­ட­மைப்­பில் மொத்­தம் எட்டு கற்­றல் நிறு­வ­னங்­கள் அடுத்த நான்கு ஆண்­டு ­க­ளுக்கு ஆண்­டுக்கு சுமார் 11,000 பயிற்சி இடங்­களை வழங்­கும்.

“மாறி வரும் காலத்­துக்கு ஏற்ப, ​​சமூ­கப் பரா­ம­ரிப்­புத்துறை ஊழி­யர்­கள் எதிர்­கா­லத்­திற்கு தேவை­யான திறன்­க­ளைப் பெற்று, தயா­ராக இருக்க வேண்­டும். ஒவ்­வொரு பரா­ம­ரிப்­புத்­துறை ஊழி­ய­ரும் தொடர்ச்­சி­யான கல்­வி­யும் திறன்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கும் திறன் மேம்­பாட்­டிற்­கும் திறந்த மன­நி­லை­யைக் கொண்­டி­ருக்க வேண்­டும். இதன்­மூ­லம், மூத்த குடி­மக்­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தற்­குத் தேவை­யான திறன்­களை அவர்­கள் பெற்­றி­ருப்­பார்­கள்,” என்­றார் அவர்.

மெய்­நி­க­ராக நடை­பெற்ற சமூ­கப் பரா­ம­ரிப்பு மனி­த­வள மேம்­பாட்டு விருது சிசி­எம்­டிஏ வழங்­கும் நிகழ்ச்­சி­யில் நேற்று கலந்­து­கொண்டு டாக்­டர் கோ பேசி­னார். இந்­நி­கழ்­வில் கிட்­டத்தட்ட 100 பேர் விருது­களைப் பெற்­ற­னர்.

இந்தத் திட்­டம் சமூ­கப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் புதி­தா­கச் சேர்­பவர்­க­ளுக்­கும் ஏற்­கெ­னவே இத்­து­றை­யி­லுள்ள ஊழி­யர்­க­ளுக்­கும் பயிற்சி ஆத­ர­வை­யும் வாய்ப்­பு­க­ளை­யும் வழங்­கு­கிறது.

விருது பெறு­ப­வர்­கள் பல்­வேறு பயிற்­சித் திட்­டங்­களில் இல­வ­ச­மாகக் கலந்து கொள்ள முடி­யும். சிசி­எம்­டிஏ மற்­றும் அவர்­கள் பணி­பு­ரி­யும் சமூ­கப் பரா­ம­ரிப்­புத் துறை சார்ந்த நிறு­வ­ன­மும் இணைந்து அவர்­களுக்கு பயிற்­சி நிதியை வழங்­கும். முழு­நேர படிப்­பைத் தொட­ரும் ஊழி­ய­ரின் பணி­க­ளைச் செய்ய, தற்­கா­லிக ஊழி­யரை வேலைக்கு அமர்த்­து­வ­தற்கு நிறு­வ­னங்­க­ளுக்­கும் சிசி­எம்­டிஏ நிதி வழங்­கும்.

தேசிய தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தின் சான்­றி­தழ் (நைடெக்) படிப்பு முதல் மருத்­துவ மற்­றும் மருத்­து­வம் சாராத துறை­களில் முது­நி­லைப் பட்­டக் கல்வி வரை அனைத்து நிலை­க­ளி­லும் திறன்­மேம்­ப­டுத்­து­தலை இத்­திட்­டம் கொண்­டி­ருக்­கிறது.

நிபு­ணத்­துவ மேம்­பாட்­டுப் படிப்­பு­களும், உள்­ளூர் அல்­லது வெளி­நாட்டு சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, சமூக பரா­ம­ரிப்­புத் துறை­களில் பயிற்­சிக் கல்­வி­யைப் பெறு­வ­தும் இதில் அடங்­கும். இவ்­வி­ரு­தைப் பெறு­வோர், பட்­டப்­ப­டிப்பை முடித்­த­வு­டன் அவர்­கள் வேலை பார்க்­கும் சமூ­கப் பரா­ம­ரிப்பு சேவை வழங்­கு­வோ­ருக்கு வேலை பார்க்­கும் ஒப்­பந்­தத்தை நிறை­வேற்ற வேண்­டும்.

“இந்­தத் தனி­ம­னி­தர்­கள் தங்­க­ளது நிபு­ணத்­து­வத்தை மேம்­ப­டுத்த உத­வு­வதை இந்த விருது நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளது. இதன்­ மூலம், சமூ­கத்­தில் முதி­யோர் மகிழ்ச்­சி­யோடு முது­மை­ய­டை­வ­தில் இவர்­க­ளால் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யும்,” என்று ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட பரா­ம­ரிப்பு முகவை குறிப்­பிட்­டது.

“சமூ­கப் பரா­ம­ரிப்­புத் துறை மாற்­ற­ம­டைந்து வரும் வேளை­யில், ​இத்­துறை சார்ந்­தோர் தொடர் கல்­வி­யைப் பெற­வும், பழக்­க­மா­ன­தி­லி­ருந்து தைரி­ய­மாக வெளியே வர ஊக்­க­மூட்­டு­கி­றேன். வேக­மாக வளர்ந்து வரும் சமூக பரா­ம­ரிப்­புத் துறைக்கு இவர்கள் ஏற்­பு­டை­ய­வர்­களா­கத் திகழ முடி­யும். முதி­யோ­ருக்கு நல்ல பரா­ம­ரிப்பை வழங்க முடி­யும்,” என்று டாக்­டர் கோ கூறி­னார்.

சிசி­எம்­டிஏ 2017இல் தொடங்­கப்­பட்­ட­தி­லி­ருந்து, 380க்கும் மேற்­பட்ட விரு­து­களை வழங்­கி­யுள்­ளது. விருது பெற்­ற­வர்­களில் பெரும்­பா­லோர் சமூக பாது­காப்­புத் துறை­யின் தற்­போதைய ஊழி­யர்­கள். 15 விழுக்­காட்­டி­னர் இத்­து­றை­யில் புதி­தா­கச் சேர்ந்­த­வர்­கள். தாதிமை, உட­லி­யக்­கப் பயிற்சி போன்ற பல்­வேறு பயிற்­சி­களை அவர்­கள் மேற்­கொண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!