ஆய்வு: சிங்கப்பூரில் மறுபயனீட்டுப் பைகளே சுற்றுப்புறத்துக்கு மிகச் சிறந்த தெரிவு

ஆய்வு: சிங்கப்பூரில் மறுபயனீட்டுப் பைகளே சுற்றுப்புறத்துக்கு மிகச் சிறந்த தெரிவு

1 mins read
61518f76-cff9-4d21-8d85-f9702493161f
குறைந்தது 50 முறை பயன்படுத்தப்படக்கூடிய மறுபயனீட்டுப் பைகளைவிட (வலது) ஒரு முறையே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் (இடது) உலக வெப்பமயமாதலுக்கு 14 மடங்கு அதிக அபாயத்தை ஏற்படுத்துகின்றன. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் சுற்­றுப்­பு­றத்தை ஆத­ரிக்­கும் ஒரு வாடிக்­கை­யா­ளர் நீங்­க­ளாக இருக்க வேண்­டும் என்று விரும்­பு­னால், நீங்­கள் பருத்­தி­யினால் ஆன பையை­விட, பல முறை பயன்­ப­டுத்­தக்­கூ­டிய மறு­ப­ய­னீட்­டுப் பையை உப­யோ­கிக்க வேண்­டும் என்­றும் அதுவே மிகச் சிறந்த தெரிவு என்­றும் புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­க­மும் ஃபின்லாந்­தில் உள்ள அவர்­க­ளின் சகாக்­களும் இதைக் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

குறைந்­தது 50 முறை பயன்­படுத்­தப்­ப­டக்­கூ­டிய மறு­ப­ய­னீட்­டுப் பைக­ளை­விட, ஒரு முறையே பயன்­படுத்­தக்­கூ­டிய பிளாஸ்­டிக் பைகள் உலக வெப்­ப­ம­ய­மா­த­லுக்கு 14 மடங்கு அதிக அபா­யத்தை ஏற்­படுத்­து­கின்­றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆக, மேற்­கு­றிப்­பி­டப்­பட்­டுள்ள பை வகை­களை அடுத்து மூன்­றாம் சிறந்த தெரி­வாக உள்­ளது, ஒரு முறை பயன்­ப­டுத்­தக்­கூ­டிய மக்­கிப்­போ­கும் பாலி­மர்­கள் உள்ள பிளாஸ்­டிக் பைகள். இவை உலக வெப்­ப­ம­ய­மா­த­லுக்கு 16 மடங்கு அதிக அபா­யத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன. அதற்கு அடுத்த நிலை­யில் மீண்­டும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பருத்­தி­யி­லான பைகள். இவை 17 மடங்கு அதிக அபா­யத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன என்­று ஆய்­வுக்­குத் தலை­மை­யேற்ற இணைப் பேரா­சி­ரி­யர் கிரே­கோர்ஸ் லிசாக் கூறினார்.