‘ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கில் இன அடிப்படையில் சலுகை காட்டப்படவில்லை’

ஆர்ச்­சர்ட் டவர்ஸ் கொலை வழக்­கில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு தண்­டனை விதிப்­பின்­போது இன அடிப்­ப­டை­யில் சலுகை காட்­டப்­பட்­டுள்­ளது என்று கூறப்­ப­டு­வது பொய்­யான, ஆதா­ர­மற்ற கருத்து என்று தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் தெரி­வித்­துள்­ளது.

2019ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி ஆர்ச்­சர்ட் டவர்ஸ் கட்­ட­டத்­தில் நிகழ்ந்த கொலை சம்­ப­வத்­தில் 31 வயது திரு சதீஷ் நோயல் கோபி­தாஸ் மர­ண­முற்­றார்.

அந்­தச் சம்­ப­வத்­தில் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்­குத் தண்­டனை விதிக்­கும்­போது, இன அடிப்­ப­டை­யி­லான சலுகை அளிக்­கப்­பட்­டது என்று சமூக ஊட­கங்­களில் செய்தி பர­வு­வதை தான் அறிந்­தி­ருப்­ப­தாக அந்த அலு­வ­ல­கம் நேற்று கூறி­யது.

“தீவிர விசா­ர­ணைக்­குப் பிறகு ஆறு பேர் அச்­சம்­ப­வத்­து­டன் தொடர்பு இல்­லா­த­வர்­கள் என்­ப­தால் அவர்­க­ளின் குற்­றச்­சாட்டு குறைக்­கப்­பட்­டது. டான் சென் யாங் மீது சுமத்­தப்­பட்ட கொலைக் குற்­றச்­சாட்­டில் எவ்­வித மாற்­ற­மும் செய்­யப்­ப­ட­வில்லை,” என்­றும் அந்த அலு­வ­ல­கம் தெளி­வுப­டுத்­தி­யது.

“எந்த ஒரு சம­யத்­தி­லும் தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­க­மும் போலி­சும் மாண்­ட­வர் மற்­றும் குற்­றம் சாட்­டப்­பட்ட எழு­வ­ரின் இனத்­தைக் கருத்­தில் எடுத்­துக்­கொள்­ள­வில்லை,” என்­றும் அது கூறி­யது. ஜோயல் டான், ஆங் டா யுவான், நெட்­டலி சியாவ் ஆகி­யோ­ருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!