கொவிட்-19 சூழலில் மற்றவர்களுக்கு உதவியதற்காக நேற்று 31 பேர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
இஸ்தானாவில் நடந்த இந்த ஆண்டின் அதிபரின் தொண்டூழியம் மற்றும் கொடைவள்ளல் விருதுகளை அதிபர் ஹலிமா யாக்கோப் வழங்கினார்.
இந்த ஆண்டு இந்த விருதுக்குச் சாதனை அளவாக 236 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. நிகழ்ச்சியில் உரையாற்றிய அதிபர், மக்களின் உதவி மனப்பான்மையை, உயர்ந்த உள்ளத்தை கொவிட்-19 வெளிக்கொணர்ந்து இருப்பதாகக் குறிப்பிட்டார்.

