உள்ளூர் சமூகத்தில் ஒன்று உட்பட, சிங்கப்பூரில் 3 புதிய கொவிட்-19 சம்பவங்கள்

உள்ளூர் சமூகத்தில் ஒன்று உட்பட, சிங்கப்பூரில் 3 புதிய கொவிட்-19 சம்பவங்கள்

1 mins read
5df7bd63-57bd-472b-8125-612022041fdf
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 17) நண்பகல் நிலவரப்படி புதிதாக மூவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,904 ஆகியுள்ளது.

உள்ளூர் சமூகத்தில் புதிதாக ஒருவருக்கு கிருமித்தொற்று பதிவாகியுள்ளது.

மற்ற இருவரில் ஒருவர் விடுதிவாசி; மற்றவர் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்.

கூடுதல் விவரங்களை சுகாதார அமைச்சு பின்னர் வெளியிடும்.

குறிப்புச் சொற்கள்