சிங்கப்பூரில் 100க்கும் குறைவானவர்களே கொவிட்-19 சிகிச்சையில்

சிங்கப்பூரில் 100க்கும் குறைவானவர்களே கொவிட்-19 சிகிச்சையில்

1 mins read
ba785459-cdf4-4baf-ac2d-9d12989dd25f
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் மார்ச் 12ஆம் தேதிக்குப் பிறகு, நேற்று (அக்டோபர் 16) முதன் முதலாக, 100க்கும் குறைவானவர்களே கொவிட்-19 சிகிச்சையில் இருந்தனர்.

30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 59 பேர் சமூகப் பராமரிப்பு நிலையங்களில் இருந்தனர்.

நேற்று புதிதாக 9 தொற்று சம்பவங்கள் பதிவாகின; அவற்றில் ஒன்று மட்டும் விடுதியில் பதிவானது.

மற்ற 8 சம்பவங்களும் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்களிடையே பதிவானது.

அவர்களில் இருவர் சிங்கப்பூரர், நால்வர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள், இருவர் குறுகிய கால வருகை அனுமதி வைத்திருப்பவர்கள்.

அவர்கள் பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள்.

இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 28 பேர் உயிரிழந்தனர்.

அனைத்துலக அளவில் 38.8 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.09 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்