இணையம் வழி நடத்தப்படும் சமூகத் தோட்டக்கலை விழா

இணையம் வழி நடத்தப்படும் சமூகத் தோட்டக்கலை விழா

1 mins read
976675f8-beef-41f3-8c0e-b67677e8e516
-

சமூ­கத் தோட்­டக்­கலை விழா இம்­மா­தம் 24ஆம் தேதி­யி­லி­ருந்து 25ஆம் தேதி வரை இணை­யம் வழி நடத்­தப்­ப­டு­கிறது. இதில் பங்­கேற்க விரும்­பு­வோர் இணை­யம் வழி 30க்கும் மேற்­பட்ட திட்­டங்­களில் ஈடு­ப­ட­லாம்.

காய்­க­றி­கள், பழ மரங்­க­ளைப் பயி­ரி­டு­வ­தற்­குத் தேவை­யான திறன்­களை 'எடி­பல்ஸ் திட்­டம்' மூலம் கற்­றுக்­கொள்­ள­லாம்.

சமூ­கத் தோட்­டக்­கலை விழா­வு­டன் இம்­மா­தம் 24ஆம் தேதி­யி­லி­ருந்து நவம்­பர் 1ஆம் தேதி வரை சிங்­கப்­பூர் பூமலை மர­பு­டைமை விழா புதிய மெய்­நி­கர் சுற்­று­லாக் களு­டன் கொண்­டா­டப்­படும்.

இம்­மா­தம் 24ஆம் தேதி­யி­லி­ருந்து 25ஆம் தேதி வரை e-Marketplace நிகழ்ச்­சி­கள் நடத்­தப்­படும். அதில் கலந்­து­கொள்­வோ­ருக்கு சிறப்­புப் பரி­சு­கள் வெல்­லும் வாய்ப்பு உள்­ளது.

திட்­டத்­தில் பங்­கெ­டுக்­கும் தாவ­ரப் பண்­ணை­க­ளி­ட­மி­ருந்து தேவை­யான தோட்­டக்­க­லைப் பொருட்­களை வாங்க சிறப்­புத் தள்­ளு­ப­டிக் குறி­யீ­டு­கள் வழங்­கப்­படும்.

பாசிர் பாஞ்­சாங் தாவ­ரப் பண்­ணை­யி­லி­ருந்து செடி­க­ளை­யும் தோட்­டக்­க­லைக்­குத் தேவை­யான பொருட்­க­ளை­யும் வாங்க ஹோர்ட்­பார்க்­கில் புதிய வர்த்­தக இடம் அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.