வாடகை வீடுகளில் வசிக்கும் ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச மளிகைப்பொருள்

2 mins read
6cc8e2be-258e-41d2-b79d-c3bcb9f4d51f
சந்தையில் விற்கப்படும் மளிகைப் பொருட்கள். கோப்புப் படம். -

பூன்லே வட்­டா­ரத்­தைச் சேர்ந்த ஆயி­ரம் குடும்­பங்­க­ளுக்கு மளி­கைப்­பொ­ருள் தொகுப்பு நேற்று இல­வ­ச­மாக வழங்­கப்­பட்­டது. எண்­ணெய் நிறு­வ­ன­மான எக்­சான்­மொ­பில், தென்­மேற்கு சமூக மேம்­பாட்டு மன்­றத்­து­டன் கொண்­டுள்ள பங்­கா­ளித்­து­வத்­தின் பத்­தா­வது ஆண்டு நிறைவை முன்­னிட்டு, இந்த மளி­கைப்­பொ­ருள் தொகுப்பு விநி­யோ­கம் இடம்­பெற்­றது.

தேசிய வளர்ச்சி அமைச்­சரும் சமூக சேவை ஒருங்கிணைப்புக்கு தலைமைதாங்கும் அமைச்சருமான டெஸ்­மண்ட் லீயும் தென்­மேற்கு வட்­டார மேயர் லோ யென் லிங்­கும் எக்­சான்­மொ­பில் மற்­றும் பூன்லே அடித்­தள அமைப்­பு­க­ளைச் சேர்ந்த தொண்­டூ­ழி­யர்­கள் 25 பேரு­டன் சேர்ந்து நேற்­று காலை­யில் பூன்லே வட்­டா­ரத்­தில் உள்ள வாட­கைக் குடி­யி­ருப்­பு­களில் வீடு வீடா­கச் சென்று அந்த மளி­கைப்­பொ­ருள் தொகுப்­பு­களை வழங்­கி­னர்.

பூன்லே வட்­டா­ரத்­தில் உள்ள, எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ளோ­ரின் வாழ்க்­கைத்­த­ரத்தை உயர்த்­தும் நோக்­கில், 'அடாப்ட் அட் பூன்லே' எனும் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இவ்­வாண்­டில் $40,000 மதிப்­புள்ள அந்த மளி­கைப்­பொ­ருள் தொகுப்­பு­கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

ஆண்­டு­தோ­றும் இப்­படி மளி­கைப்­பொ­ருள் தொகுப்­பு­களை வழங்­கி­வ­ரும் எக்­சான்­மொ­பில், இம்­முறை கொவிட்-19 நோய்ப் பர­வல் கார­ண­மாக முகக்­க­வ­சங்­க­ளை­யும் கைச்­சுத்­தி­க­ரிப்­பான்­க­ளை­யும் சேர்த்து வழங்­கி­யது.

முந்­தைய ஆண்­டு­க­ளைக் காட்­டி­லும் இம்­முறை வழங்­கப்­பட்ட மளி­கைப்­பொ­ருள் தொகுப்­பு­க­ளின் மதிப்பு 50% அதி­கம் எனக் கூறப்­பட்­டது.

"குறைந்த வரு­மா­னம் ஈட்­டு­வோர் எதிர்­கொண்டு வரும் சவால்­களை கொரோனா பர­வல் மேலும் அதி­கப்­ப­டுத்­தி­யுள்­ள­போ­தும், அனை­வ­ருக்­கும் உதவி சென்­ற­டை­யும் வித­மாக எங்­க­ளது பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து, வளங்­

க­ளைத் திரட்­டி­யும் முயற்­சி­களை இரட்­டிப்­பாக்­கி­யும் வரு­கி­றோம்," என்று திரு­வாட்டி லோ யென் லிங் சொன்­னார். உதவி தேவைப்­படும் குடும்­பங்­க­ளுக்கு அன்­றா­டம் தேவைப்­படும் பொருட்களை விநி­யோ­கிக்க தங்­கள் நிறு­வ­னத்­தின் ஊழி­யர்­கள் கைகொ­டுத்­த­னர் என்­றும் சமூ­கத்­தில் நேர்­ம­றைத் தாக்­கத்தை ஏற்­ப­டுத்த கடப்­பாடு கொண்­டுள்­ளோம் என்­றும் எக்­சான்­மொ­பில் நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் திரு­வாட்டி ஜெரால்­டின் சின் தெரி­வித்­தார்.

அத்­து­டன், குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளின் போக்­கு­வ­ரத்­துச் செல­வு­க­ளைச் சமா­ளிக்­கக் கைகொ­டுக்­கும் வித­மாக 2006ஆம் ஆண்டு முதல் தென்­மேற்கு சமூக மேம்­பாட்டு மன்­றம் - எக்­சான்­மொ­பில் போக்­கு­வ­ரத்து உத­வி­நிதி வழங்­கப்­பட்டு வரு­கிறது.

இம்­முறை ஆயி­ரம் மாண­வர்­க­ளுக்கு $150 வரை­யி­லான மின்­பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. அதில் எக்சான்மொபில் நிறுவனத்தின் பங்களிப்பு $60,000 எனத் தெரிவிக்கப்பட்டது.