கொவிட்-19: புதிதாக எழுவருக்கு பாதிப்பு

கொவிட்-19: புதிதாக எழுவருக்கு பாதிப்பு

1 mins read
455fa67a-e620-4625-b04d-0c2ddc2e6a9c
-

சிங்கப்பூரில் இன்று (மே 14) நண்பகல் நிலவரப்படி, புதிதாக ஏழு பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,911 ஆகியுள்ளது.

இவர்களில் ஒருவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர். மற்றொருவர் ஊழியர் தங்கும் விடுதியைச் சேர்ந்தவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. வெளிநாடுகளில் இக்கிருமியைத் தொற்றி இங்கு வந்த ஐந்து பேருக்கு வீட்டில் தங்கும் உத்தரவுக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.