கொவிட்-19 விதிமீறல்: விடுதி மூடல்; ஐந்து கடைகள், 16 பேருக்கு அபராதம்

கொவிட்-19 விதிமீறல்: விடுதி மூடல்; ஐந்து கடைகள், 16 பேருக்கு அபராதம்

1 mins read
2e1d1a69-ac1c-4795-81a2-6ee68ff8df86
-

கொவிட்-19 பரவல் தடுப்புக் பாது காப்பு நடைமுறை விதிகளைப் பின் பற்றத் தவறியதற்காக பென்கூலன் ஸ்திரீட்டில் உள்ள 'ஹவாயி ஹாஸ் டல்' என்னும் தங்கும் விடுதியின் சேவைகளை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அக்டோபர் 11 முதல் நடப்புக்கு வந்த அந்த உத்தரவு நவம்பர் 9 வரை நீடிக்கும் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நேற்று தனது அறிக்கையில் குறிப்பிட்டது. செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஓய்வுக்காக 260க்கும் மேற்பட்டவர் களை அந்த விடுதி தங்க அனுமதி அளித்தது விசாரணை மூலம் உறுதிசெய்யப்பட்டதாக அது தெரி வித்தது. "ஓய்வு எடுப்பதற்கான தங்கும் வசதிக்கு இன்னும் அனுமதி அளிக் கப்படவில்லை என்பதை விடுதி நடத்துநர்களுக்கு நினைவூட்டி வந் தோம். மக்களின் நலன்களையும் சுகாதாரத்தையும் பேணுவதோடு புதிய கிருமிப் பரவல் குழுமம் உரு வாகாமல் தடுக்கவும் பாதுகாப்பு நடைமுறை விதிகளை அந்நிறு வனம் பின்பற்றி இருக்கவேண்டும்," என்றது கழகம். மேலும், பாதுகாப்பு இடைவெளி தூதர்களிடம் ஹவாயி ஹாஸ்டல் உண்மையை மறைத்ததை தனது அதிகாரிகள் கண்டறிந்ததாகவும் அது தெரிவித்தது. சிறிது நேரம் ஓய்வுக