சிங்கப்பூரர்களின் அத்தியாவசியப் பயணங்களுக்கு தயாராகிறது பாத்தாம்

அத்­தி­யா­வ­சிய கார­ணங்­க­ளுக்­காக பாத்­தா­முக்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­வி­ருக்­கும் சிங்­கப்­பூ­ரர்­களை வர­வேற்க ஆயத்­தப் பணி­கள் மும்­மு­ர­மாக நடந்து வரு­கின்­றன.அத்­தி­யா­வ­சிய வர்த்­த­கம் மற்­றும் அதி­கா­ர­பூர்வ விவ­கா­ரங்­கள் தொடர்­பில் இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் பய­ணம் மேற்­கொள்­ள­லாம் என்று இந்­தோ­னீ­சி­யா­வும் சிங்­கப்­பூ­ரும் அதி­கா­ரபூர்வமாக ஒப்­பு­தல் அளித்­தி­ருந்­தன. இம்­மாதம் 12ஆம் தேதி­யன்று இது குறித்து இரு நாடு­களும் கூட்­டறிக்கை விடுத்­தன.

இதை­ய­டுத்து கொவிட்-19 கிரு­மித்­தொற்று தொடர்­பான பரி­சோ­த­னை­களை நடத்த ‘பாத்­தாம் சென்­டர்’ படகு முனை­யத்­தில் அதற்­கான சாத­னங்­க­ளைப் பொருத்­தும் பணி­கள் தொடங்­கி­யுள்­ளன. இந்த குறிப்­பிட்ட படகு முனை­யம், கடல் பய­ணத்­திற்­கு­ரிய ஒரே வழி­யா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. விமா­னப் பய­ணி­க­ளுக்கு ஜகார்த்­தா­வி­லுள்ள ‘சுகார்னோ-ஹட்டா அனைத்­து­லக விமான நிலை­யம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டு உள்­ளது.

பய­ணங்­க­ளுக்­கான விண்­ணப்­பங்­களை வரும் 26ஆம் தேதி முதல் சமர்ப்­பிக்­க­லாம். பின், பய­ணங்­கள் கூடிய விரை­வில் தொடங்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டது.இந்­தோ­னீ­சி­யர்­கள் அல்­லது சிங்­கப்­பூ­ரர்­கள் மற்­றும் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­கள் மட்­டுமே இந்த பய­ணத் திட்­டத்­தின்­கீழ் விண்­ணப்­பிக்­க­லாம்.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து இந்­தோ­னீ­சியா செல்­வோர், அங்­குள்ள அர­சாங்க அல்­லது வர்த்­தக நிறு­வனத்­தின் ஆத­ர­வைப் பெற்­றி­ருக்க வேண்­டும். அத்­து­டன் இணை­யம் வழி விசா­வுக்கு விண்­ணப்­பித்­திருக்க வேண்­டும்.அதே­போல் இந்­தோ­னீ­சி­யா­வி­லி­ருந்து இங்கு வரு­வோ­ருக்கு சிங்­கப்­பூ­ரின் அர­சாங்க அமைப்பு அல்­லது நிறு­வ­னம் ஒன்­றின் ஆத­ரவு இருக்க வேண்­டும்.

இரு நாடு­க­ளா­லும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சுகா­தா­ரக் கழ­கங்­க­ளின் கொவிட்-19 பரி­சோ­தனை முடி­வு­களும் கட்­டா­யம்.இந்­தப் பரி­சோ­த­னை­கள் நாட்டை விட்டு கிளம்­பும் முன்­ன­ரும் நாட்­டைச் சென்­ற­டைந்த பின்­ன­ரும் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும்.

“வரு­கை­யா­ளர்­க­ளுக்­கான செயல்­மு­றை­கள் தொடர்­பில் நாங்­கள் பாவ­னைப் பயிற்­சி­கள் மேற்­கொண்­டுள்­ளோம். கப்­ப­லி­லி­ருந்து இறங்­கு­வது, பரி­சோ­த­னை­யைச் செய்­வது, அவ­ர­வர் ஹோட்­டல்­கள்­க­ளுக்கு அழைத்­துச் செல்­வது ஆகி­யவை இந்­தப் பயிற்­சி­யில் இடம்­பெற்­றுள்­ளன,” என்­றார் தற்­கா­லிக பாத்­தாம் மேயர் சியம்­சுல் பஹ்­ரம்.

அடுத்த திங்­கட்­கி­ழ­மைக்கு முன்­னர் இந்த செயல்­மு­றை­க­ளைச் சோதித்­திட ஜகார்த்­தா­வின் சுகா­தார அமைச்சு மற்­றும் வெளி­யு­றவு அமைச்­சின் அதி­கா­ரி­கள் பாத்­தாம் தீவுக்­குச் செல்­ல­வுள்­ள­தாக எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

பொது இடங்­கள், மக்­க­ளுக்­கான வச­தி­கள் ஆகி­ய­வற்­றைச் சுத்­தம் செய்ய உத்­த­ரவு இட்­ட­து­டன் சில இடங்­க­ளுக்கு மீண்­டும் சாயம் பூசப்­பட்­டன. பய­ணி­க­ளுக்கு உதவ ஆங்­கி­லத்­தில் எழு­தப்­பட்ட தெளி­வான அறி­விப்­பு­களை ஆங்­காங்கே வைக்­கு­மா­றும் அவர் கேட்­டுக்­கொண்டு­ இ­ருந்­த­தாக தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!