உங்களின் வருகைக்காக காத்திருக்கும் டைனோசர்கள்!

சாங்கி விமான நிலையத்திற்கும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கும் இடையே சுமார் 3.5 கி.மீட்டர் தூரத்திற்கு இணைப்புப் பாதை ஒன்று இம்மாதம் 11ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்தப் பாதையில் வழிநெடுகிலும் 22 டைனோசர்கள் சிறியதும் பெரியதுமாக அமைக்கப் பட்டுள்ளன. இதைப் பார்க்கும்போது, ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படத்தில் வரும் டைனோசர்கள் உயிருடன் வந்து உங்களுக்காக காத்திருப்பது போல் தோன்றும்.

இந்தப் பாதையில் நடந்து செல்லலாம், மெதுவோட்ட பயிற்சி செய்யலாம். அல்லது இரு சக்கர வாகனத்தில் செல்லலாம். இந்தப் பாதை நெடுகிலும் ஓய்வு இடம், சைக்கிள் வாடகை நிலையம், காசு கொடுத்து குளிக்கும் அறை, புதிய காப்பிக் கடை ஆகியவையும் அமைந்துள்ளன. சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், தேசிய பூங்கா வாரியம் ஆகியவற்றின் ஆதரவுடன் மூன்று ஆண்டுகளில் இந்தப் புதிய பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

டைனோசர் உருவங்களுடன் கூடிய சாங்கி ஜுராசிக் மைல் என்ற 1 கி.மீ. பாதைக்குள் செல்ல கட்டணம் இல்லை. கிருமித்தொற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டு, வருகையாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்.

பாதுகாப்பு இடைவெளி அவசியம் என்பதால் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாரயிறுதி நாட்களில் changi playpass மூலம் முன்பதிவு கட்டாயம் செய்யவேண்டும். கிருமித்தொற்றால், இணைப்புப் பாதை திறக்கப்படுவது சில மாதங்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!