மூன்றடுக்கு உச்சிமாடிவீடு $62 மில்லியனுக்கு நஷ்டத்தில் விற்பனை

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்னணுப் பொருட்களைத்  தயாரிக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ‘டைசன்’ என்ற நிறுவனம், ‘வாலிச் ரெசிடென்ஸ்’ கட்டடத்தில் இருக்கும் மூன்றடுக்கு உச்சி மொட்டைமாடி வீட்டை $62 மில்லியன் விலைக்கு விற்கிறது.

அந்த வீடு சென்ற ஆண்டில் சாதனை அளவாக $73.8 மில்லியன் விலைக்கு வாங்கப்பட்டது.

தஞ்சோங் பகாரில் 63 மாடி கூக்கோ டவரில் மூன்று உச்சி மாடிகளை ஆக்கிரமித்துக்கொண்டு உள்ள சிங்கப்பூரின் ஆக உயரமான அந்த மொட்டைமாடி வீடு 21,108 சதுர அடி பரப்புள்ளது.

சதுர அடி $3,000 விலைக்கு விற்கப்படுகிறது என்று பிசினஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. 

அந்த வீட்டை இந்தோனீசியாவில் பிறந்தவரான அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள லியோ கோகுவான் என்ற கோடீஸ்வரர் வாங்குகிறார். 

டெக்சாசில் வசிக்கும் இவர், எஸ்எச்ஐ இன்டர்நேஷனல் என்ற தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர்.

இந்த நிறுவனத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். 99 ஆண்டு குத்தகையுடன் கூடிய இந்த மிகப்பெரிய ஆடம்பர வீட்டில் நீச்சல் குளமும் தனிப்பட்ட மின்தூக்கி வசதியும் உண்டு.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon