சான்: சிங்கப்பூரின் பகுதிமின்கடத்தி துறை மிகவும் பிரகாசமாக உள்ளது

சான்: சிங்கப்பூரின் பகுதிமின்கடத்தி துறை மிகவும் பிரகாசமாக உள்ளது

2 mins read
6b8854bf-e2d2-425c-8d1f-45e242c81b93
-

சிங்­கப்­பூ­ரின் பொது­வான மின்­ன­ணு­வி­யல் துறை, குறிப்­பாக பகு­தி­மின்­க­டத்தி துறை­, பொரு­ளி­ய­லில் மற்ற துறை­க­ளை­விட சிறப்­பா­கச் செய்­துள்­ள­தால், அந்­தத் துறை­யில் இன்­னும் அதி­க­மான வேலை­கள் உரு­வா­கும் வாய்ப்பு பிரகாச­மாக இருக்­கிறது என்று வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­துள்­ளார்.

பகு­தி­மின்­க­டத்தி துறை கடந்த சில ஆண்­டு­க­ளாகவே படிப்­ப­டி­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது என்று கூறிய அமைச்­சர், வரும் ஆண்­டு­களில் இத்­துறை மேலும் நல்ல முன்னேற்றம் காணும் வாய்ப்பு உள்­ளது என்­றும் விவ­ரித்­தார். இவ்­வாண்­டின் முதல் ஒன்­பது மாதங்­களில், சிங்­கப்­பூ­ரின் மொத்த மின்­ன­ணு­வி­யல் துறை $5.7 பில்­லி­யனை நிரந்­தர சொத்­து ­கள் முத­லீட்­டில் பதிவு செய்­த­து­டன் மொத்த வர்த்­த­கத்­துக்­காக $376 மில்­லி­ய­னை­யும் செல­விட்­டது.

இந்த முத­லீ­டு­கள், இப்­போது இத்­துறை உரு­வாக்­கிய வேலை வாய்ப்­பு­கள் தவிர, அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்­டு­களில் கிட்­டத்­தட்ட 1,100 வேலை­களை உரு­வாக்­கும் என்­றும் திரு சான் நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார். இவ்­வாண்டு ஏப்­ரல் மாதம் முதல் மின்­ன­ணு­வி­யல் துறை­யைச் சேர்ந்த 1,300க்கு மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் 2,800 வேலை வாய்ப்­பு­களை வழங்­கி­யுள்­ளன. அவற்­றில் 1,880 வேலை வாய்ப்­பு­கள் என்­றும் எஞ்­சி­யவை வேலை இணைப்­பு­கள் மற்­றும் வேலைப் பயிற்சி வாய்ப்­பு­கள் என்­றும் இந்த வேலை வாய்ப்­பு­களில் பெரும்­பா­லா­னவை நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­பர்­கள் ஆகி­யோ­ருக்கு உரி­யவை என்­றும் வர்த்­தக தொழில் அமைச்சு விளக்கியது.

"பகு­தி­மின்­க­டத்தி துறை­யில் அதி­க­மான வேலை வாய்ப்­பு­கள் உரு­வா­வ­தற்கு முக்­கிய கார­ணம், நமது முன்­னைய தலை­வர்­கள் உரு­வாக்­கிய அடித்­த­ளம்­தான் என்று நான் உறு­தி­யா­கக் கூறு­வேன்.

"அவர்­க­ளின் முயற்­சி­யில் உல­கின் முன்­னணி நிறு­வ­னங்­கள் இங்கு நல்ல முத­லீ­டு­களைச் செய்­தன. அதன் பலனை நாம் இன்று அனு­ப­விக்­கி­றோம்," என்­றும் திரு சான் நினை­வு­கூர்ந்­தார்.

சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் பகு­தி­மின்­க­டத்தி துறை­யின் பங்­க­ளிப்பு 1990ஆம் ஆண்­டில் ஒரு விழுக்­கா­டாக இருந்து 2019ஆம் ஆண்­டில் 6.9 விழுக்­கா­டாக உயர்ந்­துள்­ளது.

இவ்­வாண்டு முதல் ஆறு மாதங்­களில், ஒட்­டு­மொத்த பொரு­ளி­யல் சரிவு கண்­ட­தால், பகு­தி­மின்­க­டத்தி துறை­யின் வளர்ச்சி ஆண்டு அடிப்

­ப­டை­யில் 1.7% ஆக இருந்­தது.

"இந்­தத் தலை­முறை சந்­தித்­துள்ள மிக மோச­மான பின்­ன­டைவு இது. ஆனால், சிங்­கப்­பூர் இன்­னும் கடு­மை­யா­கப் போராடி, வெவ்­வேறு சந்­தை­க­ளுக்கு ஏற்ற சுற்­றுச்­சூ­ழலை உரு­வாக்­கி­னால் இந்­தத் தலை­

மு­றை­யின் மிக உயர்­வான முன்­னேற்­றத்தை நாம் காண முடி­யும்," என்­றும் அமைச்­சர் சான்

வலி­யு­றுத்­தி­னார்.