‘காட்டு நகர்’ தெங்காவில் பொது குளிர்சாதன வசதியை பெற 1,000 குடும்பங்கள் விருப்பம்

‘காட்டு நகர்’ என்று வர்­ணிக்­கப்­படும் தெங்கா பேட்டையில் குடியே­ற­வி­ருக்­கும் ஏறக்­கு­றைய 1,000 குடும்­பங்­கள், பொது குளிர்­சா­தன முறை­யில் இணைந்­து­கொள்ள விருப்­பம் தெரி­வித்து கையெ­ழுத்­திட்டு இருக்­கின்­ற­ன.

அந்­தப் புதிய குடி­யி­ருப்­புப் பேட்­டை­யில் சுமார் 8,000 பிடிஓ வீடு­கள் இது­வ­ரை­யில் விற்­ப­னைக்கு கொடுக்­கப்­பட்டு உள்­ளன. மையப்­படுத்­தப்­பட்ட குளிர்­சா­தன வசதியைப் பெற விரும்­பு­வோ­ருக்கு நடை­முறைச் செல­வில் 30 விழுக்­காடு வரை குறை­யும்.

தொடக்க செல­வில் 15 முதல் 20 விழுக்­காடு வரை மிச்­ச­மா­கும் என்று எஸ்பி குழுமம் தெரி­வித்­துள்­ளது.

தெங்­கா­வில் இந்த நிறு­வ­னமே பொது­ குளிர்­சா­தன முறையை நிர்­வ­கித்து நடத்­தும்.

தெங்கா நக­ரம் ‘அறி­வார்ந்த எரி­சக்தி நகர்’ என்று குறிப்­பி­டப்­படு­கிறது. அங்கு பல அறி­வார்ந்த அதி­ந­வீன அம்­சங்­கள் இடம்­பெற இருக்­கின்­றன. அவற்­றில் பொது­வான குளிர்­சா­தன வச­தி­யும் ஒன்று.

குறிப்­பிட்ட வீவக புளோக்­கு­களின் கூரைத் தளத்­தில் தண்ணீரைக் குளி­ரூட்­டக்­கூ­டிய சாத­னங்­கள் அமைக்­கப்­படும்.

அந்­தச் சாத­னங்­கள் சூரிய மின்­சக்­தி­யில் செயல்­படும். அதி­லி­ருந்து எல்லா வீடு­களுக்கும் குளி­ரூட்­டப்­பட்ட நீர் குழாய் வழி­யாக அனுப்பப்­படும். இத்­த­கைய ஏற்­பாடு மூலம் செலவு குறை­யும் என்று எஸ்பி குழுமம் தெரி­வித்­துள்ளது.

இந்த முறை­யைத் தேர்ந்­தெ­டுத்­துக் கொள்­ப­வர்­கள், தங்­கள் வீடு­களில் கைபேசிச் செயலி ஒன்­றைக் கொண்டே இந்­தச் சாத­னங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­த­லாம்.

‘மை தெங்கா’ என்ற அச்செயலி எஸ்பி குழுமத்துக்குச் சொந்­த­மானது. வாக­ன மின்­னேற்றி நிலை­யங்­கள் எங்கு உள்­ளன என்­பதை அந்­தச் செயலி வழி­யாக குடி­யிருப்­பா­ளர்­கள் தெரிந்­து­கொள்­ள­லாம்.

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஆத­ர­வான செய்­கை­க­ளைச் செய்து அதற்­கான வெகு­ம­தி­க­ளை­யும் அந்­தச் செயலி மூலம் மக்கள் பெற­லாம்.

ஒவ்­வொரு வீட்டு புளோக்­கி­லும் உள்ள மின்­தூக்­கிக் கூடத்­தில் மின்­னி­லக்­கப் பலகை ஒன்று பொருத்­தப்­பட்டு இருக்­கும். அந்த மின்­னி­லக்க சாத­னத்­தைப் பார்த்து அந்­தப் புளோக்­கில் எவ்­வ­ளவு எரி­சக்தி பயன்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கிறது என்­ப­தை­யும் அத­னால் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு எவ்­வ­ளவு பாதிப்பு ஏற்­படும் என்­ப­தை­யும் தெரிந்­து­கொள்­ள­லாம்.

தோ பாயோ­வில் உள்ள வீவக மையத்தில் இப்­போது ‘எனது தெங்கா அனு­பவ நிலை­யம்’ என்ற பெயர் தாங்­கிய ஒரு காட்­சிக்கூடம் செயல்­ப­டு­கிறது. அதில் பல­வற்­றை­யும் மக்­கள் தெரிந்­து­கொள்­ள­லாம்.

வார நாட்­களில் இந்­தக் கூடம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்­தி­ருக்­கும். எல்­லா­ரும் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என்­றா­லும் ஒரு நேரத்­தில் 16 பேர் வரை­தான் உள்ளே செல்ல முடி­யும் என்­ப­தால் முன்­ப­திவு செய்துகொள்­வது நல்­லது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!