ஆஸ்திரேலிய நிறுவனத்தில் சிங்போஸ்ட் கொள்முதல்

ஆஸ்திரேலிய நிறுவனத்தில் சிங்போஸ்ட் கொள்முதல்

1 mins read
a4c00970-df68-48db-91c1-991c75459a73
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் விக்­டோ­ரியா மாநி­லத்­தில் ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு உள்ள தள­வா­டப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­ன­மான 'ஃபிரைட் மேனேஜ்­மெண்ட் ஹோல்­டிங்ஸ்' என்ற நிறு­வனத்­தில் 38 விழுக்­காட்டு பங்கை ரொக்­க­மா­கப் பணம் கொடுத்து வாங்­கு­வது குறித்து சிங்­கப்­பூர் போஸ்ட் (சிங்­போஸ்ட்) ஆராய்ந்து வரு­கிறது.

இந்­தக் கொள்­மு­த­லின் மதிப்பு A$85 மில்­லி­யன் (S$84.1 மில்­லியன்).

ஃபிரைட் மேனேஜ்­மெண்ட் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­தின் இப்­போ­தைய பங்­கு­தா­ரர்­க­ளு­டன் அக்­டோ­பர் 16ஆம் தேதி நிபந்­த­னை­யு­டன் கூடிய விற்­பனை மற்­றும் கொள்­மு­தல் உடன்­பாட்டை சிங்­போஸ்ட்டுக்கு முற்­றி­லும் சொந்­த­மான 'சிங்­போஸ்ட் லாஜிஸ்­டிக்ஸ் ஹோல்­டிங்ஸ்' என்ற நிறு­வ­னத்­தின் மூலம் சிங்­போஸ்ட் செய்து கொண்­டுள்­ளது.