இணைய மோசடிகள் அதிகரிப்பு: புதிய பாணிகளில் வலைவீச்சு

இணை­யத்­தில் சூழ்ச்சி செய்து ஒரு­வ­ரின் ரக­சிய தக­வல்­க­ளைப் பெற முய­லும் மோசடி பேர்­வ­ழி­கள் புதிய பாணி தில்­லு­முல்­லு­களில் ஈடு­பட்டு இருக்­கி­றார்­கள் என்று போலிஸ் எச்­ச­ரித்து இருக்­கிறது.

வங்­கி­க­ளின் விளம்­ப­ரங்­க­ளைப் போல போலி விளம்­ப­ரங்­கள், போலி அதிர்ஷ்ட குலுக்­கல்­கள் மூலம் அவர்­கள் மக்­களை ஏமாற்ற முயல்­கி­றார்­கள் என்று போலிஸ் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்­ளது.

வாட்ஸ்­அப்­பில் வரும் அத்­த­கைய செய்­தி­கள், ஃபேஸ்புக்­கில் வரும் விளம்­ப­ரங்­க­ளைக் கண்டு ஏமாந்துவிட வேண்­டாம்.

அத்­த­கைய தக­வல்­க­ளுக்­குச் செவி­சாய்த்து ரக­சிய தக­வல்­களைக் கொடுத்­து­விட வேண்­டாம் என்று குறிப்­பிட்­டுள்ள போலிஸ், வங்­கிக் கணக்­கில் ஏதே­னும் தில்­லு­முல்லு இடம்­பெற்­றி­ருப்­ப­தா­கச் சந்­தே­கம் கிளம்­பி­னால் அது பற்றி உட­னடியாகத் தெரி­விக்­கும்­படி மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டது.

இந்த ஆண்டு ஜன­வரி முதல் ஜூன் வரை இத்­த­கைய மோச­டிகள் தொடர்­பாக 898 புகார்­கள் தெரி­விக்­கப்­பட்­டன. இது 2019ஐவிட பல மடங்கு அதி­க­ம். 2020 முதல் பாதி­யில் மொத்­தம் $3.6 மில்­லி­யன் பறிபோனது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!