கொவிட்-19 தடமறியும் சாதனம் திரட்டிய தகவல்களைத் தாங்களே வைத்துக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சீன தம்பதியர் சிங்கப்பூரைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்களுக்கு எதிரான விசாரணை இப்போது நடந்து வருகிறது.
ஷி ஷா, 37, என்ற மாதும் அவருடைய கணவரான ஹு ஜுன், 39, என்பவரும் சீனாவுக்கு சென்றுவிட்டு ஜனவரி 20ஆம் தேதி இங்கு திரும்பி வர அனுமதிக்கலாம் என்று கீழ் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த வழக்கு வரும் ஜனவரி 25ல் மீண்டும் விசாரணைக்கு வரவிருந்தது.
இப்போது தம்பதிக்குத் தலா $10,000 பிணை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் சிங்கப்பூரிலேயே இருந்து வரவேண்டும். குற்றச்சாட்டுகளை எதிர்த்து இத்தம்பதியர் விசாரணை கோரியிருக்கிறார்கள்.

