பிடாடாரியில் புதிய பலதுறை மருந்தகம்

புதிய பிடா­டாரி குடி­யி­ருப்­புப் பேட்டை வரும் 2027ஆம் ஆண்­டிற்­குள் ஒரு பல­துறை மருந்­த­கத்­தைக் கொண்­டி­ருக்­கும். அப்­பர் அல்­ஜுனிட் சாலை­யில் அமை­யும் அந்த மருந்­த­கத்­து­டன் தாதிமை இல்­ல­ம் ஒன்றும் இணைந்­தி­ருக்­கும்.

2030ஆம் ஆண்­டிற்­குள் மேலும் 12 பல­துறை மருந்­த­கங்­க­ளைக் கட்டி முடிக்க அர­சாங்­கம் இலக்கு கொண்­டுள்­ளது. அதில் பிடா­டாரி பல­துறை மருந்­த­க­மும் ஒன்று. அந்த 12 பல­துறை மருந்­த­கங்­களும் செயல்­பாட்­டிற்கு வந்தபின், சிங்­கப்­பூர் மொத்­தம் 32 பல­துறை மருந்­த­கங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும்.

ஒரே இடத்­தில் பல­துறை மருந்­த­க­மும் தாதிமை இல்­ல­மும் அமை­வ­தற்­கான கார­ணத்தை விளக்­கிய சுகா­தார மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி, “பிடா­டாரி பல­துறை மருந்­த­கத்­திற்கு வரும் நோயா­ளி­க­ளுக்கு அது முக்­கி­ய­மா­னது. ஏனெ­னில், முதிர்ச்­சி­யுற்ற பேட்­டை­யான தோ பாயோ­வில் நாட்­பட்ட நோய்­க­ளா­லும் முது­மைக்­கால நோய்­க­ளா­லும் பாதிக்­கப்­படும் மூத்த குடி­மக்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது,” என்­றார்.

முதிர்ச்­சி­ய­டைந்த நகர்ப்­ப­கு­தி­யான தோ பாயோ­வில், 93 ஹெக்­டர் பரப்­ப­ள­வி­லான பிடா­டாரி பேட்டை அமைந்­துள்­ளது. உட்லீ, பொத்­தோங் பாசிர், பார்ட்லி ஆகிய மூன்று எம்­ஆர்டி நிலை­யங்­கள் அதை­யொட்டி அமைந்­துள்­ளன.

அல்­காஃப் லேக்­வியூ வீட­மைப்­புக் கழ­கத் தொகு­திக்கு புதிய ஒருங்­கி­ணைந்த மேம்­பாட்­டுத் திட்­டம் அமைந்­தி­ருக்­கிறது. அதற்கு அ­ருகே, அதா­வது 500 மீட்­டர் தொலை­வில் உட்லீ எம்­ஆர்டி நிலை­யம் இருக்­கிறது.

அங் மோ கியோ பல­துறை மருந்­த­கத்­திற்கு நேற்று சென்று இ­ருந்த டாக்­டர் ஜனில், பிடா­டாரி பல­துறை மருந்­த­கம் அப்­பேட்­டை­யில் உள்ள பல புதிய இளம் குடும்­பங்­க­ளுக்­குச் சேவை­யாற்­றும் என்று கூறி­னார்.

கட்­டு­மா­னப் பணி­கள் படிப்­ப­டி­யாக முடி­வ­டைந்­த­பின், வரும் 2022ஆம் ஆண்­டு­வாக்­கில் அந்த வட்­டா­ரத்­தில் ஏறத்­தாழ 10,000 வீவக குடி­யி­ருப்­பு­கள் இருக்­கும்.

“இவ்­வாண்­டின் பிற்­ப­கு­தி­யில் ஒப்­பந்­தப்­புள்ளி கோரப்­படும். வரும் 2027ஆம் ஆண்­டு­வாக்­கில் பிடா­டாரி பல­துறை மருந்­த­கம் செயல்­பாட்­டிற்கு வந்­து­வி­டும் என நம்­பு­கி­றோம்,” என்­றார் டாக்­டர் ஜனில்.

அல்­காஃப் லேக்­வியூ உட்­பட பிடா­டா­ரி­யில் அமை­யும் முதல் இரண்டு வீட­மைப்­புத் திட்­டங்­களில் அமைந்­துள்ள வீடு­களை உரி­மை­யா­ளர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கும் பணி கடந்த ஆண்டு ஜூலை­ மாதம் தொடங்கிவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!