தொழிற்சங்கத் தலைவர்கள் மீது மரியாதை வைத்துள்ளேன்: பாட்டாளிக் கட்சி எம்.பி. விளக்கம்

கடந்த வாரம் இடம்­பெற்ற நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தின்­போது செங்­காங் குழுத்­தொ­குதி எம்.பி. ஜேமஸ் லிம் தெரி­வித்த சில கருத்­து­களுக்கு தொழிற்­சங்­கத் தலை­வர்­கள் பலர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

கடந்த பல ஆண்­டு­களில் முத்­தரப்­புப் பேச்­சு­வார்த்­தை­கள் தொடர்­பாக தாங்­கள் ஆற்­றிய பணி­களை இணைப் பேரா­சி­ரி­யர் சிறு­மைப்­படுத்திவிட்­டார் என்று தொழிற்­சங்­க­வா­தி­கள் பலர் ஃபேஸ்புக் பதி­வு­கள் வழி­யா­க­வும் ‘தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்’, ‘லியான்ஹ சாவ்­பாவ்’ சீன நாளி­தழ் ஆகி­ய­வற்­றுக்கு எழுதி வாச­கர் கடி­தங்­கள் மூல­மா­க­வும் குற்­றம் சாட்­டி­ இருக்கின்றனர்.

குறிப்­பாக, குறைந்த ஊதி­யம் பெறும் ஊழி­யர்­க­ளின் வரு­மா­னம் தொடர்­பான விவ­கா­ரத்­தில் தங்­களது கண்­ணோட்­டங்­க­ளைக் குறிப்­பிட்­ட­போது திரு லிம் பயன்­ப­டுத்­திய சொற்­கள் அவர்­க­ளுக்கு மகிழ்ச்சி அளிக்­க­வில்லை.

கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று நடந்த நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தின்­போது, படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை­யால் கடந்த ஆண்­டு­களில் 80,000 துப்­பு­ர­வா­ளர்­கள், பாது­கா­வ­லர்­கள், நில­வ­னப்பு ஊழி­யர்­க­ளின் ஊதி­யம் 30% கூடி­யுள்­ள­தா­க தேசிய தொழிற்சங்க காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளரும் சுகாதார மூத்த துணை அமைச்சருமான கோ போ கூன் தெரி­வித்­தார்.

அத்­து­டன், முத்­த­ரப்­புப் பங்­காளி­க­ளு­டன் இணைந்து பணி­ ஆற்று­வ­தன் அவ­சி­யத்தை உணர்ந்­துள்ள மூத்த தொழிற்­சங்­க­வா­தி­கள் போன்ற உரிய பங்­கா­ளி­க­ளு­டான பேச்­சு­வார்த்தை அணு­கு­மு­றை­யும் மிக முக்­கி­யம் என்று டாக்­டர் கோ குறிப்பிட்டார்.

அதன்­பின் பேசிய பேரா­சி­ரி­யர் லிம், தொழி­லா­ளர் சங்­கத் தலை­வர்­க­ளின் கண்­ணோட்­டத்­தைப் பற்­றிக் குறிப்­பிட்­ட­போது ‘பாமர மக்களுக்குரிய அறி­வும் நம்­பிக்­கை­களும்’ என்ற சொற்­க­ளைப் பயன்­படுத்தி இருந்­தார்.

இதை­ய­டுத்து, “பேரா­சி­ரி­யர் லிம்­மின் கருத்­து­கள் வருத்­தம் தரு­வதாக உள்­ளன,” என்று கட்­ட­டக் கட்­டு­மான, மரத் தொழில்­கள் ஊழி­யர் சங்­கத்­தின் முன்­னாள் தலை­வர் திரு நசொர்­தின் பி. முகம்­மது ஹாஷிம் ‘தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளி­த­ழுக்கு எழு­திய வாச­கர் கடி­தத்­தில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

“எங்­க­ளது இத்­தனை ஆண்­டு­கா­லக் கடும் உழைப்­பைச் சிறு­மைப்­ப­டுத்­து­வ­தாக அவ­ரது கருத்து­கள் அமைந்­துள்­ளன,” என்று திரு ஹாஷிம் தெரி­வித்திருந்­தார்.

பேரா­சி­ரி­யர் லிம்­மின் தொனி­யும் அவர் பயன்­ப­டுத்­திய சொற்­களும் ஆயி­ரக்­க­ணக்­கான தொழிற்­சங்­கத் தலை­வர்­களை அவ­ம­திப்­பதாக உள்ளது என்று உலோ­கத் தொழி­லக ஊழி­யர்­கள் சங்­கத்­தின் தலை­மைச் செய­லா­ளர் லிம் டெக் சுவான், ‘சாவ்­பாவ்’ இத­ழுக்கு எழு­திய கடி­தத்தில் கூறி­யி­ருந்­தார்.

பாது­கா­வல் அதி­கா­ரி­க­ளின் நிலையை மேம்­ப­டுத்த பல முயற்சி­களை எடுத்­து வந்துள்ளதாக ஃபேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம் குறிப்­பிட்ட பாது­காவல் ஊழி­யர் சங்­கம், “அதில் எது­வும் சாதா­ர­ண­மா­ன­தல்ல என்­பது உறுதி. அவை வெறும் ஏட்­டுக் கோட்­பாடு­களும் அல்ல. நாங்­கள் செய்­வதைத்­தான் சொல்­கி­றோம், சொல்­வ­தைத்தான் செய்­கி­றோம்,” என்­றும் தெரி­வித்­து இருக்கிறது.

இதைத் தொடர்ந்து, கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று ஒரு ஃபேஸ்புக் பதி­வின் மூலம் விளக்­கம் அளித்த பேரா­சி­ரி­யர் லிம், பரிவு உணர்­வு­மிக்க பிர­தி­நி­தித்­து­வம், முத­லா­ளி­களு­டன் பேசும் திறன், ஊழி­யர்­களின் உரி­மை­க­ளுக்­காகக் கடு­மை­யாக உழைப்­பது எனப் பல அம்­சங்­களில் தொழிற்­சங்­கத் தலை­வர்­கள் மீது தாம் மரி­யாதை கொண்­டி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

அத்­து­டன், நேற்­றைய ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் வாச­கர் கடி­தப் பக்­கத்­தி­லும் அவர் அதை மீண்­டும் வெளிப்­ப­டுத்தி இருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!