இறுதிச் சடங்கு நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டி நெறிமுறைகள்

இறுதிச்சடங்கு சேவை­க­ளைக் கையாளும் நிறு­வ­னங்­கள் இனி கடு­மை­யான விதி­மு­றை­க­ளைப் பின்­பற்ற வேண்­டும்.

சென்ற ஜன­வரி மாதம் மண்­டாய் தக­னச்­சா­லை­யில் உடல்­கள் மாற்றி எரி­யூட்­டப்­பட்­ட சம்­ப­வம் குறித்து எழுந்த புகாரை அடுத்து இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இறுதிச்சடங்கு சேவை­யில் ஈடு­படும் நிறு­வ­னங்­கள் கடைப்­பி­டிக்­கப்­பட வேண்டிய புதிய விதி­மு­றை­கள் நேற்று வெளி­யி­டப்­பட்­டன. அதன்­படி இறந்­த­வர்­க­ளின் உடல்­களை ஓரி­டத்­தில் இருந்து மற்­றோர் இடத்­திற்கு எடுத்­துச்­செல்­லும் வாக­னங்­கள் சுத்­த­மாக இருப்­ப­தோடு சரி­யான முறை­யில் பரா­ம­ரிக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும். வாக­னம் கிளம்பு­வ­தற்கு முன்பு வாக­னத்­தில் வைக்­கப்­பட்­டுள்ள சவப்­பெட்டி பாது­காப்­பாக வாக­னத்­து­டன் பொருத்­தப்­பட்­டி­ருப்­பதை நிறு­வ­னங்­கள் உறுதி செய்ய வேண்­டும்.

இறந்­த­வர்­க­ளின் கண்­ணி­யத்­தைக் கட்­டிக்­காக்­கும் வகை­யி­லும் உற்­றாரை இழந்து தவிக்­கும் குடும்­பத்­தி­ன­ரின் தேவை கருதியும் நன்கு செயல்­பட வேண்­டும் என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் ஈமச்­ச­டங்­குச் சேவை நிறு­வ­னங்­க­ளின் சங்­க­மும் தெரி­வித்­தன.

நேற்று வெளி­யி­டப்­பட்ட புதிய வழி­காட்டி விதி­மு­றை­கள் கடந்த ஜூன் மாதம் வெளி­யிடப்பட்ட விதி­மு­றை­க­ளு­டன் தொடர்­பு­டை­யவை.

விதி­மு­றை­க­ளின் மற்ற அம்­சங்­கள், இறந்­த­வர்­க­ளின் உடல்­களை அடை­யா­ளம் காண்­ப­தற்கு முறை­யான நடை­மு­றையை நிறு­வ­னங்­கள் கொண்­டி­ருக்­க­வேண்­டும். அத்­து­டன் உடல்­க­ளைப் பத­னப்­ப­டுத்­தும் அறை­யில் அள­வுக்கு அதி­க­மான உடல்­கள் வைக்கப்படாமல் இருப்­பதை நிறு­வ­னங்­கள் உறு­தி­செய்ய வேண்­டும். நோய்ப்­ப­ர­வல் அபா­யத்­தைக் குறைக்­கும் வகை­யி­லான சுகா­தார முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை­யும் கொண்­டி­ருக்க வேண்­டும்.

கடந்த ஜன­வரி மாதம், ‘ஹார்­மனி ஃபியூனரல் கேர்’ என்­னும் ஈமச்­ச­டங்­குச் சேவை வழங்­கும் நிறு­வ­னம் விதி­மு­றை­க­ளின்­படி போது­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. அத்­து­டன் இறந்­த­வர்­க­ளின் உடல்­களை முறை­யா­கக் கையா­ள­வில்லை. அத­னை­ய­டுத்து அந்த நிறு­வ­னம் அர­சாங்­கத்­தின் ஈமச்­ச­டங்கு வச­தி­க­ளைப் பெறு­வ­தற்­குத் தடை விதிக்­கப்­பட்­டது.

உட­லைப் பதப்­ப­டுத்­தும் வச­தி­யுள்ள ஈமச்­ச­டங்கு நிலை­யங்­கள் உரிய ஆவ­ணங்­களை வைத்­தி­ருப்­ப­தை­யும் சுற்­றுப்­புற தூய்­மைத் தரத்­தைப் பின்­பற்­று­வ­தை­யும் உறு­தி­செய்­யா­வி­டில் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று வாரி­யம் தெரி­வித்­துள்­ளது.

அந்த நிறு­வ­னம், இறுதிச்­ச­டங்­கின்­போது உடல்­கள் மாற்றி எரி­யூட்­டப்­பட்ட சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­யது. இது­ சிங்­கப்­பூ­ரில் நடந்த முதல் சம்­ப­வம்.

கிறிஸ்­துவ சம­யத்­தைச் சேர்ந்த ஒரு­வ­ரின் உட­லுக்­குப் பதி­லாக திரு கீயின் உடல் எரி­யூட்­டப்­பட்­டு­விட்­ட­தாக ஹார்­மனி ஃபியூன­ரல் கேர் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து பெறப்­பட்ட அந்­தச் செய்தி குறிப்­பிட்­டது.

தாவோயிச சம­யத்­தைச் சேர்ந்த 82 வயது திரு கீயின் உட­லுக்கு கிறிஸ்­துவ முறைப்­படி இறுதிச் சடங்­கு­கள் செய்­தது திரு கீயின் குடும்­பத்­தி­னரை துய­ரத்­தில் ஆழ்த்­தி­யது.

தாவோயிச சமய வழ­க்கப்­படி, இறந்­த­வ­ரின் உடல் மூன்று நாட்­க­ளுக்­குப் பிற­கு­தான் எரி­யூட்­டப்­படும். அத­னைக்­கூட திரு கீக்கு செய்ய முடி­யா­மல் போன­தாக அவ­ரது மரு­ம­கன் திரு ஹோ மிகுந்த வேத­னை­யு­டன் குறிப்­பிட்­டார். இன்­னொ­ரு­வரான கிறிஸ்­துவ மதத்­தைச் சேர்ந்த 70 வயது ஆட­வ­ரின் உடல் மாற்றி எரி­யூட்­டப்­பட்­டது.

இந்த இரண்டு பேரின் உடல்­களும் ‘செஞ்­சுரி புரோடக்ட்ஸ்’ நிறு­வ­னத்­தில் ஒரே பத­னப்­ப­டுத்­தப்­படும் அறை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. உடல் பத­னப்­ப­டுத்­தப்­படும் வச­தி­க­ளைக் கொண்­டி­ருந்த அந்த நிறு­வ­னம், பத­னப்­ப­டுத்­தப்­படும் அறை­யில் சரி­யான முறை­யில் எந்த ஒரு ஆவ­ணப் பதி­வு­க­ளை­யும் கொண்­டி­ருக்­க­வில்லை. ‘செஞ்­சுரி புரா­டக்ட்ஸ்’ நிறு­வ­னம் குற்­ற­வி­யல் விசா­ர­ணையை எதிர்­நோக்­கு­கிறது.

தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் வெளி­யிட்­டுள்ள புதிய விதி­மு­றை­க­ளின்­படி இறுதிச்ச­டங்கு, எரி­யூட்­டல், இறு­திச்­ச­டங்கு வச­தி­க­ளைப் பெறு­தல் போன்­ற­வற்­றுக்கு தங்­களை வாரி­யத்­தில் பதி­வு­செய்து கொள்ள வேண்­டும். நிறு­வன ஒப்­பந்­த­தா­ரர்­கள் மூன்று ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை தங்­க­ளைப் பதிவு செய்­து­கொள்ள வேண்­டும். பதி­வுக்­கட்­ட­ணம் இல­வ­சம். புதிய விதி­மு­றை­கள் குறித்து இறுதிச்ச­டங்கு நிறு­வன ஒப்­பந்­த­தா­ரர்­க­ளுக்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. புதிய விதி­மு­றை­க­ளுக்­குத் தங்­க­ளைத் தயார்ப்­ப­டுத்­திக்­கொள்ள போது­மான கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக வாரி­யம் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!