திரையரங்குகளில் அனுமதிக்கப்பட 'டிரேஸ்டுகெதர்' சாதனம் கட்டாயம்

திரையரங்குகளில் அனுமதிக்கப்பட 'டிரேஸ்டுகெதர்' சாதனம் கட்டாயம்

1 mins read
628aa52b-fcad-432e-92a9-44e6b06fcaf2
-

திரை­ய­ரங்­கில் படம் பார்க்க விரும்­பு­வோர், அக்­டோ­பர் 26ஆம் தேதி முதல் தங்­க­ளின் திறன்­பே­சி­யில் பதி­வி­றக்­கம் செய்­யப்­பட்ட 'டிரேஸ்­டு­கெ­தர்' செயலி அல்­லது தங்­க­ளி­டம் உள்ள 'டிரேஸ்­டு­கெ­தர்' கரு­வி­யைப் பயன்­ப­டுத்த வேண்­டும். அதைக் கொண்டு திரை­ய­ரங்­குக்­குள் செல்ல அனு­மதி வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த கட்­டாய நட­வ­டிக்கை அனைத்து திரை­ய­ரங்­கு­க­ளி­லும் படிப்­ப­டி­யாக அமல்­ப­டுத்­தப்­படும்.

இதை நடை­மு­றைப்­ப­டுத்த திரை­ய­ரங்க நிறு­வ­னங்­க­ளுக்கு நவம்­பர் 16 வரை அவ­கா­ச­மும் வழங்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் இந்த நட­வ­டிக்கை முழு­மை­யாக நடப்­புக்கு வந்த பிறகு, திரைப்­ப­டம் பார்க்­கச் செல்­லும் அனை­வ­ரும் கட்­டா­ய­மாக 'டிரேஸ்­டு­கெ­தர்' பயன்­ப­டுத்­தி­யாக வேண்­டும்.

இதன்­படி, திரை­ய­ரங்­குக்­குச் செல்­வோர் தங்­க­ளின் கைபே­சி­யைக் கொண்டு 'சேஃப்எண்ட்ரி' எனப்­படும் பாது­காப்­பான வரு­கைப் பதி­வு­முறை செய்­யவோ 'சிங்­பாஸ்' செய­லி­யைப் பயன்­ப­டுத்­தவோ முடி­யாது. அவர்­க­ளின் அடை­யாள அட்­டை­யின் பட்­டைக் குறி­யை­யும் பயன்­ப­டுத்த இய­லாது.

புதிய நடைமுறைக்கு மக்கள் பழகிக்கொள்ள அவ­கா­சம் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­வார்ந்த தேச, மின்­னி­லக்க அர­சாங்­கக் குழு­மத்­தைச் சேர்ந்த பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

இந்த புதிய நடை­மு­றைக்­காக புதிய சாத­னங்­களைத் திரை­ய­ரங்க நிறு­வ­னங்­கள் பெறத் தேவை­யில்லை என்­றும் பேச்­சா­ளர் கூறி­னார்.

இத்­த­கைய கட்­டாய 'டிரேஸ்­டு­கெ­தர்' வரு­கைப் பதி­வு­மு­றையை வரும் வாரங்­களில் அறி­மு­கப்­ப­டுத்­தும் முதல் இடங்­களில் திரை­ய­ரங்­கு­களும் ஒன்­றாக இருக்­கக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

அத்­து­டன் இந்த நடை­முறை ஹோட்­டல்­கள், உணவு மற்­றும் பானக் கடை­கள், உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள், ஒரு சில அலு­வ­ல­கங்­கள் ஆகி­ய­வற்­றி­லும் அமல்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்று சென்ற மாதம் தெரி­விக்­கப்­பட்­டது.