தன் பணிப்பெண்ணை மாது ஒருவர் ஐந்து ஆண்டுகளாக துன்புறுத்தியதன் தொடர்பில் நேற்று அவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. உலோகக் கரண்டி, மண் கோப்பை, காலணியின் கூரான அடிப்பகுதி போன்றவற்றைப் பயன்படுத்தி டான் பீ கிம், 55, தனது பிலிப்பீன்ஸ் பணிப்பெண்ணைத் தாக்கியதாகக் கூறப்பட்டது.
தன்னைத் தலையிலும் நெற்றியிலும் டான் தாக்கியதை அடுத்து வலியும் வீக்கமும் ஏற்பட்ட நிலையில் 48 வயது பணிப்பெண், போலிசில் புகார் செய்தார். பலமுறை பணிப்பெண்ணை டான் அடித்து இருக்கிறார் என்றும் சில சமயங்களில் அவரைக் கிள்ளுவது, அறைவது, பொருட்களைக் கொண்டு தாக்குவது போன்றவற்றைச் செய்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. வீட்டுப் பொருட்கள் ஏதேனும் சேதமடைந்தால் அவற்றுக்கான பணத்தைப் பணிப்பெண்ணின் சம்பளத்திலிருந்து டான் எடுத்துக் கொள்வார் என்றும் கூறப்பட்டது.

