அலுவலக இடத்தில் திடீர் சோதனை; 11 ஆடவர்கள் கைது

அலுவலக இடத்தில் திடீர் சோதனை; 11 ஆடவர்கள் கைது

1 mins read
032fbca5-6b9b-4696-97b1-cdb88081ac42
போலிசாரின் சோதனையில் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள், இரு மேசைகள், 20 நாற்காலிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை -

அங் மோ கியோ­வில் உள்ள தொழிற்­சாலை அலு­வ­லக இடம் ஒன்­றில் போலிஸ் அதி­கா­ரி­கள் கடந்த சனிக்­கி­ழமை திடீர் சோதனை நடத்­தி­னர்.

இதில் சூதாட்­டம் தொடர்­பான குற்­றங்­க­ளுக்­காக 21 வய­துக்­கும் 38 வய­துக்­கும் இடைப்­பட்ட 11 ஆட­வர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அங் மோ கியோ ஸ்தி­ரீட் 64ல் அமைந்­துள்ள அந்த அலு­வ­லக இடம், சூதாட்­டத்­தில் ஈடு­ப­டு­வதற்­கான பதுங்­கு­மி­ட­மாக செயல்­பட்டு வந்­த­தாக போலி­சா­ரின் முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

அந்த அலு­வ­லக இடத்தை 32 வயது ஆட­வர் ஒரு­வர் இயக்கி வந்­த­தா­க­வும் 21 வயது, 38 வய­தில் உள்ள மற்ற இரு ஆட­வர்­கள் அதன் சட்­ட­வி­ரோத செயல்­பா­டு­க­ளுக்­குத் துணை­நின்­ற­தா­க­வும் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­தச் சூதாட்ட நட­வ­டிக்­கை­களில் வேறு எட்டு ஆட­வர்­களும் பங்­கேற்­றது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக போலிஸ் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

சூதாட்­டத்­திற்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட சாத­னங்­கள், இரு மேசை­கள், 20 நாற்­கா­லி­கள் ஆகி­ய­வற்றை போலி­சார் பறி­மு­தல் செய்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான போலிஸ் அதி­கா­ரி­க­ளின் விசா­ரணை தொடர்­கிறது. சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸ் எச்சரித்துள்ளது.