சிங்பாஸ் கைபேசி செயலி குழுவுக்கு விருது

அறி­வார்ந்த தேச இலக்கை நோக்கி பய­ணம் செய்­து­வ­ரும் சிங்­கப்­பூ­ரில் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கு­வ­தற்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­ப­டு­கிறது. இந்­தக் கோட்­பாட்டை மற­வாது சிங்­பாஸ் கைபேசி செய­லியை உரு­வாக்­கிய குழு­வுக்கு வரு­டாந்­திர பொதுத் துறை உரு­மாற்ற விரு­து­களில் சேவை விநி­யோக உன்­னத விருது வழங்­கப்­பட்­டுள்­ளது.

17 ஆண்­டு­க­ளுக்கு முன்பு தொடங்­கிய சிங்­பாஸ் தளத்தை மேம்­ப­டுத்­திய பெருமை இக்­கு­ழு­வைச் சேரும். சிங்­பாஸ் கைபேசி செயலி திரை வாசிப்­பான், குரல் வழி உத்­த­ரவு போன்ற அம்­சங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும். இத­னால் பார்­வை­யில் குறை­உள்­ள­வர்­களும் இச்செய­லி­யைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று அர­சாங்க தொழில்­நுட்ப முக­வையின் பய­னீட்­டா­ளர் அனு­பவ வடி­வ­மைப்­பா­ளர் திரு சியூ கியோ ஹுவீ தெரி­வித்­தார்.

அது­மட்­டு­மல்­லாது, திறன்பேசி இல்லாத­வர்­கள் ஒரு முறை மட்­டும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய மறைச்­சொல் மூலம் சிங்­பாஸ் தளத்­தைப் பயன்­ப­டுத்­த­லாம்.

இந்த ஒரு­முறை மறைச்­சொல் குறுஞ்­செய்தி வாயி­லாக அனுப்­பி­வைக்­கப்­படும். இவ்­வாண்டு இறு­திக்­குள் தங்­கள் குடும்ப உறுப்­பி­னர்­கள் சார்­பா­க­வும் ஒரு­முறை மறைச்­சொற்­க­ளைப் பெற முடி­யும். இது குறிப்­பாக, திறன்பேசி இல்லாத முதி­ய­வர்­க­ளுக்கு உத­வி­யாக இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் செயலி 2018ஆம் ஆண்டு தொடங்­கி­யது. விரல்ரேகை போன்ற அடை­யா­ளம் காணும் முறையை செயலி பயன்படுத்துகிறது.

சிங்பாஸ் தளத்தைப் பயன்படுத்தி பல்வேறு அரசாங்க அமைப்புகள் தொடர்பான பரிவர்த்தனைகள் மட்டுமின்றி வங்கிகள், சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் போன்ற தனியார் துறை தொடர்பான பரிவர்த்தனைகளையும் செய்யலாம்.

சிங்பாஸ் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு முன்பு பயனீட்டாளர்கள் தங்கள் சிங்பாஸ் மறைச்சொல்லை நினைவில் வைத்திருக்க வேண்டும். அதை மறந்தால் புதிய மறைச்சொல்லுக்குக் கோரிக்கை விடுக்க வேண்டும். புதிய மறைச்சொல் கேட்டு ஒரு மாதத்துக்கு 150,000க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு பொதுத் துறை உருமாற்ற விருது நிகழ்ச்சியில் 12 பிரிவுகளின்கீழ் 80 விருதுகள் வழங்கப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!